கோவைக்கு பெருமிதம் --" ரவீந்தரநாத் தாகூர் "கோவைக்கு இன்னொரு பெருமிதம் இருக்குங்க...

1926 ஆம் ஆண்டு எங்கள் ஊரில் இருக்கும் சர்வஜனா பள்ளிக்கு வடநாட்டை சேர்ந்த ஒரு கவிஞர் வந்தாருங்க , அந்த கவிஞரை அப் பள்ளியில் உள்ளவர்கள் நம் தேசத்திற்காக ஒரு கவிதை பாட சொன்னார்கள் .

அந்த கவிஞரும் பாடி சென்றார் .

அது என்ன கவிதை தெரியுமா " ஜன கண மன "
வந்த கவிஞர் " ரவீந்தரநாத் தாகூர் " அவர் 1926 ஆம் ஆண்டு கோவை சர்வஜனா பள்ளியில் அன்று பாடிய அந்த கவிதைதான் 1950 ஆம் ஆண்டு நம் இந்திய தேசத்தின் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.

இந்திய நாட்டிற்கு தேசிய கீதம் முதன் முதலில் நம் கோவையில் தான் விதிக்கப்பட்டது என்னும் பொழுது நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது...

~மகேந்திரன்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்