சந்திரோதயா மந்திர்



கீதை என்ற தர்ம போதனையை உலகிற்கு உபதேசித்த கிருஷ்ண பரமாத்மா தனது இளம்பருவத்தில் விளையாடி மகிழ்ந்ததாக நம்பப்படும் தற்போதைய உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில்
‘சந்திரோதயா
 மந்திர்
 ‘என்ற பெயரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்ட ஸ்ரீல பிரபுபாதா என்பவர் விரும்பினார். 

‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்றறியப்படும் ‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தற்போதைய ‘அக்‌ஷய் தாம் பிருந்தாவன்’ பகுதி அருகே 213 மீட்டர் உயரத்தில் எழும்பவுள்ள இந்த சந்திரோதயா மந்திருக்கான திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது அம்மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, வேத விற்பன்னர்களின் மந்திர ஒலியுடன் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று தொடங்கியது. இவ்விழாவில் ஆன்மிக பெரியோர்கள், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமா மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பெரும் திரளாக பங்கேற்றனர். ------maalai malar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்