வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா

24-07-2014------வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா துவங்கியது!
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, பூச்சாட்டுடன் துவங்கியது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், இந்தாண்டு குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. முன்னதாக, பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், அம்மன் சுவாமியின் ஆபரண அணிக்கூடையை தலையில் சுமந்தபடி, பூசாரி பரமேஸ்வரனை, கோவிலுக்கு மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர்.சிறப்பு பூஜை செய்து, அம்மன் சுவாமிக்கு பூசாரி காப்பு கட்டினார். தொடர்ந்து, சுப்ரமணியசுவாமி கோவில் அர்ச்சகர் தனசேகர குருக்கள் பூஜை செய்து, பூசாரிக்கு காப்பு கட்டினார். பின், நெல்லித்துறை பொதுமக்கள் சார்பில், இரவு திருவிழா பூச்சாட்டப்பட்டது.
வரும் 25ம் தேதி லட்சார்ச்சனையும், 26ம் தேதி ஆடி அமாவாசையும், 27ம் தேதி கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு அம்மன் அழைப்பும், காலை 6.00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.வரும் 30ம் தேதி மாவிளக்கும், மாலையில் பூ பல்லாக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி இரவு பரிவேட்டையும், வாண வேடிக்கையும் நடக்க உள்ளது. ஆக., 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும், 4ம் தேதி 108 குத்து விளக்கு பூஜையும், 5ம் தேதி மறுபூஜையும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, துணை ஆணையர் பழனிக்குமார், பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.------Dinamalar news

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்