திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலைக்கட்டிய கருணாகரத்தொண்டைமான்

திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலைக்கட்டிய கருணாகரத்தொண்டைமான்.------தொண்டைமான் எனப்படுவோர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த அரச குலத்தவரைக் குறிக்கும்.

கருணாகரத் தொண்டைமான் குலோத்துங்க சோழனின் படைத்தலைவன். கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் என்ற மன்னன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். இவன் பல்லவத் தொண்டைமான் குலத்தைச் சேர்ந்தவன். இவன் குல மரபினர் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
பல்லவர்
இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி என்னும் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெயரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன.
சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் தொண்டைக் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.
சோழர் ஆட்சியில் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான்
பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி.கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி. இவன் தொண்டை நாட்டை ஆண்டு வந்த பல்லவ அரசன் ஆவான். சோழ மாமன்னனான குலோத்துங்கனுக்கு உட்பட்ட சிற்றரசர்களில் ஒருவனாய் நெருங்கிய நண்பனாகவும் இருந்திருக்கிறான். இந் நட்பு காரணமாகவே குலோத்துங்கன் காஞ்சியில் வந்து படைகளுடன் தங்கினான் என்பர். கருணாகரன் கலிங்கப் போருக்குப் படைத்தலைவனாய்ப் புறப்படும் போது, இவனுடைய தமையனும் குலோத்துங்க சோழனின் நன்பனுமாகிய பல்லவனும் உடன் சென்றான் எனக் குறிக்கப்படுகிறது.
"தொண்டையர்க் கரசு முன்வ ருஞ்சுரவி
துங்க வெள்விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால் களிற்றின் மிசை கொள்ளவே" -- (பாடல். 364)

என்ற பாடலால் இதை அறியலாம். தமையன் தொண்டை நாட்டை ஆள, குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனாய் அமைந்த கருணாகரன், வண்டைநகரின் கண் இருந்த பகுதியை ஆட்சி செய்தான் என அறியலாம். இவன் வண்டையர்க்கரசு என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். வண்டை நகர் அக்காலத் தொண்டை நாட்டில் சிறந்திருந்த நகரங்களில் ஒன்று. இக்காலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூர் வண்டை நகராக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அக்காலத்தில் வண்டைநகர், மல்லை மாமல்ல புரம், காஞ்சி, மயிலை (மயிலாப்பூர்) என்பன சிறந்த பட்டினங்கள் எனவும் அவை அடங்கிய நாடே தொண்டை நாடு என்பதும் கீழ்வரும் பரணி பாடலால் அறியலாம்.

" வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே" - பாடல் . 534

Comments

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. விக்கிரமாதித்திய சகாப்தம் ஏற்கனவே நடந்து வருகிற தென்றும் சாகா என்னும் சகாப்தம் இன்னும் ஆரம்பமாகவில்லை என்றும் தெரிகிறது. இதன்படி பார்த்தால் இந்த கோயில் கி.மு.57, 58-லிருந்து கி.பி. 78க்குள் உண்டாகி இருக்க வேண்டும் மென்று தெரிகிறது. திரையனுடைய ஆட்சிப்படி பார்க்கினும் ஏறக்குறைய இந்தக் காலமே நமக்குக் கிடைக்கிறது. ஆயினும் நமக்கு தொண்டைமான்கள் மூவர் கிடைக்கின்றனர். அதாவது தொண்டைமான்(தொண்டைமான் சக்ரவர்த்தி) புராணத்தின் படி, திரையன்-வடக்கு தொண்டைமண்டலத்தை ஆண்டவன், தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆண்டவன். இம்மூவரும் வெவ்வேறா அல்லது ஒருவரேயா என்பது ஆறாயப்பட வேண்டும்.
  இவர் தான் திருப்பதி கோயிலை கட்டியவன் கருணாகரத்தொண்டைமான் இல்லை. சரி தங்கள் இருப்பிடம் பழங்கனான்குடியா? நான் துவாகுடி

  ReplyDelete
 3. பழங்கனாங்குடி பூர்வீகம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்