ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் அன்னதானக் கூடம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே மிகப்பெரிய அன்னதானக் கூடம் ரூ. 1.75 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கும் வரவுள்ளது.

இந்த புதிய அன்னதானக் கூடத்தில் ஒரே நேரத்தில் சுமார் 600 பேர் வரை அமர்ந்து உணவு அருந்தும் வகையில், மிக பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அன்னதானக் கூடத்தின் அருகில் 2,600 சதுர அடியில் அன்னதானத்துக்காக காத்திருப்புக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கலாம். மேலும், 2,600 சதுர அடியில் அனைத்து நவீன வசதிகளுடன்கூடிய சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலில், தற்போது உள்ள அன்னதானக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வருகிறது. புதிய அன்னதானக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 6,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அன்னதானக் கூடத்தைச் சுற்றிலும் பசுமை பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

source: dinamani & daily thanthi

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்