படித்துறை விஸ்வநாதர் கோயில்
படித்துறை விஸ்வநாதர் கோயில். மயிலாடுதுறை. மூலவர்:காசி விசுவநாதர் தாயார்:விசாலாட்சி முக்தி தலம் காசி. அதற்காகவே காசிக்குச் சென்று வருவார்கள் பக்தர்கள். அந்தக் காசி இருப்பது வடநாட்டில். அங்குள்ள பிரதான தெய்வம் காசி விஸ்வநாதர். அவரே இங்கு தென்னாட்டில், மயிவாடுதுறையில் குடி கொண்டு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம் காசி விஸ்வநாதர் பாவங்களை போக்குபவர். காசி விசாலாட்சி விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். , காவிரி தென் கரையில் அமைந்துள்ளது அருமையான அமைதியான கோவில். திருத்தருமபுரம் மடத்தின் பொறுப்பில் உள்ள கோயில் இதுவாகும் இந்த ஆலயத்தில் உள்ள மங்கள சனி பகவான் கிழக்கு நோக்கி இருப்பதால் எதிரில் தந்தையான சூரிய பகவானும், குருவாகிய பைரவரும் இருப்பதால் சாந்த மூர்த்தியாக மங்களகரமாக அருள் பாலிக்கின்றார். சனி பகவானை பிரார்த்தித்தால் திருமண தோஷம் விலகும். புத்திரப்பேறு கிடைக்கும், நோய் நொடி இல்லாத ஆயுள் கிடைக்கும். மூன்று நிலை ராஜகோபுரம் முன்புறம் அணி செய்கிறது. அதனை அடுத்து முகப்பு மண்டபமும் உள்ளது. சிறிய முகப்பு மண்டபத்துடன் இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்க