Skip to main content

படித்துறை விஸ்வநாதர் கோயில்


படித்துறை விஸ்வநாதர் கோயில்.
மயிலாடுதுறை.

மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:விசாலாட்சி

முக்தி தலம் காசி. அதற்காகவே காசிக்குச் சென்று வருவார்கள் பக்தர்கள். அந்தக் காசி இருப்பது வடநாட்டில். அங்குள்ள பிரதான தெய்வம் காசி விஸ்வநாதர். அவரே இங்கு தென்னாட்டில், மயிவாடுதுறையில் குடி கொண்டு அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்

காசி விஸ்வநாதர்  பாவங்களை போக்குபவர்.

காசி விசாலாட்சி

விசாலாட்சி எனில் அகண்ட கண்களை கொண்டவள் என்று பொருள். ,

காவிரி தென் கரையில் அமைந்துள்ளது அருமையான
அமைதியான கோவில்.

திருத்தருமபுரம் மடத்தின் பொறுப்பில் உள்ள கோயில் இதுவாகும்

இந்த ஆலயத்தில் உள்ள மங்கள சனி பகவான் கிழக்கு நோக்கி இருப்பதால் எதிரில் தந்தையான சூரிய பகவானும், குருவாகிய பைரவரும் இருப்பதால் சாந்த மூர்த்தியாக மங்களகரமாக அருள் பாலிக்கின்றார்.

சனி பகவானை பிரார்த்தித்தால் திருமண தோஷம் விலகும். புத்திரப்பேறு கிடைக்கும், நோய் நொடி இல்லாத ஆயுள் கிடைக்கும்.

மூன்று நிலை ராஜகோபுரம் முன்புறம் அணி செய்கிறது. அதனை அடுத்து முகப்பு மண்டபமும் உள்ளது. சிறிய முகப்பு மண்டபத்துடன் இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

 சிறிய வடிவிலான அம்பிகை தெற்கு நோக்கி உள்ளார்.

பிராகாரத்தைச் சுற்றிலும் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது.

பிராகார வலத்தில் முதலில் உள்ளவர் மகாகணபதி. தனி சிற்றாலயத்தில் உள்ளார்.

அடுத்து, ஓங்கி வளர்ந்த வேம்பு ஒன்று பக்தர்களின் பிணி தீர்க்க பல வேண்டுதல் கயிறுகள், தொட்டில்கள் ஆகியவற்றைச் சுமந்து நிற்கிறது.

முருகன் தனி சிற்றாலயத்தில் உள்ளார். அவருக்கு முகப்பு மண்டபமாக ஓடுகள் வேயப்பட்ட மண்டபம் உள்ளது.

மகாலட்சுமியும் தனி சிற்றாலயம் கொண்டுள்ளார்.

கோஷ்டங்களில் தென்முகக் கடவுள், திருமால், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

இக்கோயிலில் மங்கள சனி பகவான் தனி சன்னதியில் உள்ளார்.

துலாக்கட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.
துலாக்கட்டத் தலத்தின் இறைவன் காசி விசுவநாதர். இறைவி விசாலாட்சி. துலாக்கட்டக் காவிரியின் நடுவில் ரிஷபதேவர் எழுந்தருளியுள்ளார்.

மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் துலாகட்டத்தில் கடைமுழுக்கு தீர்த்தவாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிகச் சிறப்புடையதாகக் கூறப்படுகிறது. இந்த கடைமுழுக்குத் திருநாளில் காவிரியில் பிரம்மன் வழிபட்டு படைப்புத் தொழிலை மேற்கொண்டார். திருமால் வழிபட்டு பிருகு முனிவரின் பத்தினியைக் கொன்ற பாவத்தைப் போக்கிக்கொண்டார். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் கடைமுழுக்கு நடைபெறும். இதையொட்டி மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் மயூரநாதர் கோவில், வள்ளலார் கோயில், அய்யாறப்பர் கோயில், படித்துறை காசிவிசுவநாதர்கோயில் ஆகிய கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி துலா கட்டத்தை வந்தடைவர். இதேபோல பரிமள ரெங்கநாதர் பெருமாள் கோயிலில் இருந்து தாயார், பெருமாள் காவிரிக்கரைக்கு வந்துசேர்வர். அந்தச் சமயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அப்போது காவிரியில் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:

அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்

மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்

கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்

மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்

சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்

சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது

திருவிழாக்கள்:

கடைமுழுக்கு தீர்த்தவாரி, முடவன் முழுக்கு, சப்தஸ்தான விழா

கும்பகோணத்தில் இருந்து 40km.

சிதம்பரம் – மயிலாடுதுறை சாலையில், நகரின் வடக்கில் ஓடும் காவிரி பாலத்தின் தென் கரையில் உள்ளது படித்துறை விஸ்வநாதர் கோயில்.

Comments

  1. படித்துறை விஸ்வநாதர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக பொறுப்பில் உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள். தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது.. சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக. "தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து கு

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்; மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.------சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்

பறவை நாச்சியார்

அவள் பெயர் பரவை, சுந்தரரின் மனைவி பெயரையே கொண்டவள். திருவாரூர் தியாக விடங்கர் (தியாகராஜர்) கோயிலில் தொண்டு புரிந்து வந்தவள். இவளின் பேரழகும், சைவத் தொண்டுகளும் மாமன்னன் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனை மிகவும் கவர்ந்தன. எத்தனை போரில் ஈடுபட்டு, எத்தனை உயிர்களை பரித்தவனாக இருந்தாலும் அவனும் ஆண் தானே? உடனே அவளை காதலிக்கத் துவங்கினான் ராஜேந்திரன். பல நூறு வருடங்களாக செங்கல் கட்டுமானமாகவே இருக்கும் திருவாரூர் கோயிலை கற்றளியாக மாற்ற வேண்டும் என்பது பரவையின் ஆசை, இதை ராஜேந்திரனிடன் கூறுகிறார் பரவை.  அவளை மிகவும் நேசித்த ராஜேந்திர சோழன் அவளின் வேண்டு கோளுக்காகத் தியாகராஜரின் திருக்கோயிலைக் கருங்கல் கொண்டு எடுத்து கற்றளியாகப் புதுப்பிக்கிறான். அவனின் 16-18ம் ஆண்டுகளில் வீதிவிடங்கனின் கோயில் கற்கோயிலாக மாற்றப்பெற்றது. கற்றளி மட்டும் போதாது, இந்த கோயிலை பொற் கோயிலாகவே மாற்ற வேண்டும் என்று பரவை ராஜேந்திரனிடம் கேட்டாள். காதலி பேச்சுக்கு மறு பேச்சு ஏது? உடனே ராஜேந்திரன் கோயிலை உள்ளும் புறமும் தங்கத்தகடுகள் போர்த்தி அழகு செய்தான். முகமண்டபம், தூண்கள் ஆகியவற்றை செம்புத் தகடுகளால் அலங்கரித்தான். 18ம் ஆ