கள்ளர் குடியினரின் சோழ பட்டங்கள்

கள்ளர் குடியினரின் சோழ பட்டங்கள்
=======================================

பெருவீரத்தோடு போரிட்டு பல நாடுகளை கைப்பற்றிய தம் குலமரபினருக்கு சோழர்கள் வழங்கிய பட்டங்கள்

அருவாநாட்டான் (அருவாநாடு)
கங்கைநாட்டான் (கங்கபாடி)
தக்கோலாக்கியர் (தக்கோலம்)
குச்சிராயர் (குஜராத்),
கொல்லமுண்டார் (கொல்லம்)
பாண்டியராயன் (பாண்டியர்-மதுரை)
மண்ணையார் (மண்ணைக் கடக்கம்)
ஈழம்கொண்டார் (ஈழம்)
கடாரம்கொண்டார் (கடாரம்)
மாணக்கவாரர் (மாணக்கவாரம்)
பன்னையார் (பன்னையூர்)
சீனத்தரையன் (சீனா)
ராசகண்டியன் (கண்டி, இலங்கை)
அங்கராயர் (அங்கம்)
ஈழத்தரையர் (ஈழம்)
கோட்டைமீட்டார்
மாளு(வ)சுத்தியார் (மாளுவம்)
விசயதேவர் (ஸ்ரீவிசயம்)

• அருவாநாட்டான்

கரிகால் சோழன் வழி வந்தவர்கள். காவிரியின் கழிமுகப் பகுதிக்கு வடக்கேயுள்ள பொண்ணையாற்று பள்ளத்தாக்கு அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. கரிகால் சோழன் அருவா நாட்டை வெற்றி கொண்டு ஆண்டான் என்றும் வரலாறு கூறுகிறது. (30 கல்வெட்டுகள் வை.சுந்தரேசவாண்டையார்) அருவாநாட்டான், அருவாத்தலையன் என்னும் கள்ளர் பட்டங்கள் அருவாநாட்டு வெற்றிகளோடு சம்பந்தப்பட்டுள்ளது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மன்னார்குடி பைங்காநாடு என்ற ஊரில் வாழுகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்

• கங்கைநாட்டான்

இராசராசன் வெற்றி கொண்ட நாடுகளில் கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி என்பனவும் அடங்கும். கங்கபாடி மைசூர் நாட்டின் தென்பகுதியும், சேலத்தின் வடபகுதியும் இனந்த பரப்பாகும். இதனை ஆண்டவர்கள் குவாளாபுர பரமேசுவரர்களான மேலைக்கங்கர்களாவர். கங்கபாடி வெற்றியின் பின்னர் வெற்றி தந்த கள்ளர்களுக்கு இராசராசன் வழங்கிய பட்டங்கள் கங்கைநாட்டான், கங்கநாட்டான், சோழகங்கநாட்டான், சோழகங்கதேவன் என்பனவாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் நெடுவாக்கோட்டை, இராப்பூசல், திருவப்பூர், திருச்சி கல்விக்குடி ஆகிய ஊர்களில் பெருமளவில் வாழுகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• தக்கோலாக்கியர்

அரக்கோணம் அருகே தக்கோலம் இருக்கிறது. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழர்களின் ஆளுகைக்குள் இருந்தது தக்கோலம். அதனை கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம் தக்கோலர் தக்கோலாக்கியர், தக்கோலாக்கியார். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சாவூரிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• குச்சிராயர்

கூர்ச்சரம் > குச்சரம் எனப் பிராகிருதம் ஆகும். கூர்ச்சரம் (குஜராத்)  கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம் குச்சராயர், குச்சிராயர், குச்சியராயர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சாவூரிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• கொல்லமுண்டார்

கொல்லம் என்பது சேரநட்டின் ஒரு பகுதியாகும். இராசராச சோழன் படை எடுத்து கொல்லத்தை வென்றான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய கள்ளர்களுக்கு அளித்த பட்டமே கொல்லத்தரையன், கொல்லமுண்டார் என்பதாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருவையாறு உடுமலைப்பேட்டை காரத்தொழுவு, திருக்களம்பூர்,செட்டிபட்டி, கண்டலூர் முதலிய ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• பாண்டியராயன்

இராசராச சோழன் தனது ஆட்சியில் படையெடுத்து பாண்டிய மன்னன் அமரபுயங்கனை வென்று பாண்டிய நாட்டை தன் ஆட்சிக்குட்படுத்தி தனக்கு பாண்டியன் என்ற பட்ட்த்தையும் சூட்டிக்கொண்டான். இந்த வெற்றிக்கு தலைமை தாங்கிய கள்ளர்களுக்கு அளித்த பட்டமே பாண்டியன், பாண்டியராயன் என்பதாகும். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும்,சித்தமல்லி, புதுக்கோட்டை வடவாளம், இராயப்பட்டி, கும்பகுடி, அவ்வையார்பட்டி, திருச்சி அல்லூர் முதலிய ஊர்களிலும் உள்ளனர். மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• மண்ணையார்

முதலாம் இராசேந்திரன் தெற்காசிய நாடுகளை கைப்பற்றிய போது நிகழுற்ற போரில் மண்ணைக் கடக்கத்தை வென்று கடும் போர் புரிந்த கள்ளர்களுக்கு மண்ணையார் என்ற பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• ஈழம்கொண்டார்

இலங்கையை வெல்ல போர் புரிந்த கள்ளர்களுக்கு முடிகொண்டார், ஈழம்கொண்டார் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது, இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• கடாரம்கொண்டார்

மலேயாவின் மேற்கரையில் உள்ள கடாரத்தை வென்ற கள்ளர்களுக்கு கடாரம்கொண்டார், கடாரம்தாங்கியார், கடாரத்தலைவர், கடாரத்தரையர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது, இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும், புதுக்கோட்டையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• மாணக்கவாரர்
நிக்கோபார் என்ற மாணக்கவாரம் தீவை வென்றதற்காக கள்ளர்களுக்கு மாணக்கவாரர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் பட்டுக்கோட்டையிலும், புதுக்கோட்டையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• பன்னையார்
சுமத்திரா தீவின் பன்னையூரை வென்றதனால் கள்ளர்களுக்கு பன்னையார் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையிலும் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• சீனத்தரையன்
வணிகத்தின் பொருட்டு சீனநாட்டிற்கு அனுப்பியோருக்கு கள்ளர்களுக்கு சீனத்தரையரென்றும் பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் தஞ்சையில் வாழுகின்றனர்.

• ராசகண்டியன்
இலங்கையில் சோழ அரசின் சார்பாக கண்டி மாநகர் என்னும் தலைநகர் அமைத்து அரசாண்ட கண்டியூர் அரசனுக்கு ராசகண்டியன் என்னும் பட்டமும் வழங்கி, அதே ராசகண்டியன் என்ற பட்டத்தை தனது சிறப்புப் பட்டமாக இராசராச சோழன் தனுக்கு சூட்டிக் கொண்டது பெரும்வியப்புக்குறியது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் கண்டியூர், கண்டியன்பட்டு (இன்றைய கண்டிதம்பட்டு) கண்டியன் காடு மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• அங்கராயர்
முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் அங்கம் என்ற நாட்டை வென்று கங்கையில் நீர் எடுத்த வீர கள்ளர்களுக்கு அங்கராயர் என்று பட்டங்களும் வழங்கப்பட்டது. இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• ஈழத்தரையர்
சோழ மரபினர். இலங்கை மேல் படை எடுத்து வேற்றி கொண்டவர்கள். ஈழத் தரைகளையும், திரைகளையும், கட்டியாண்டதால் ஈழத்தரையர், ஈழத்திரையர், ஈழங்கொண்டார் என்றும், இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் திருச்சி மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• கோட்டைமீட்டார்
பிற்காலச் சோழர்களில் அனபாயசோழன் என்றழைக்கப்படும் குலோத்துங்கசோழன் ஈழத்தரையன், ஈழங்கொண்டான், கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்னும் பட்டப்பெயர்களை தன் சிறப்புப் பெயர்களாகக் கொண்டிருந்தான் என கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை அரசனின் கோட்டையையும் முடியையுங் கொண்டதால் கோட்டை சுருட்டி, கோட்டைமீட்டார், முடிகொண்டார் என்று கள்ளர்கள அழைக்கப்பட்டனர்.  இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• மாளு(வ)சுத்தியார்
மாளுவ நாட்டை கைப்பற்றிய கள்ளர்களுக்கு வழங்கிய பட்டம்  மாளு(வ)சுத்தியார். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர்  மன்னார்குடி மேலும் பல ஊர்களிலும் வாழுகின்றனர்.

• விசயதேவர்

முதலாம் இராசேந்திர சோழன் தலைமையில் இந்துமாக் கடலில் இருந்த ஸ்ரீவிசயம் (இன்றைய சுமத்திரா) என்ற நாட்டை சோழ கடல் படையினர் வெற்றி கண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவந்து சோழ மண்டலத்துடன் இனைத்துக் கொண்டனர். இந்த வெற்றிக்கு பலம் சேர்தவர்கள் என்ற பெருமை விசயராயன், விசயதேவனென்ற பட்டம் சுமந்தோராவர். இப்பட்டமுடைய கள்ளர் குடியினர் ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, விளார், வலங்கைமான், முனியூர், அவளிநல்லூர், மன்னார்குடி, சேரங்குளம், புதுக்கோட்டை மாவட்ட திருக்களம்பூர்,வாண்டாக்கோட்டை முத்லிய ஊர்களில் பெரும் எண்ணிக்கையில் வாழுகின்றனர். இப்பட்டங்கள் விசுவராயர் என்றும் திரிந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்