Posts

Showing posts from September, 2014

ஆழி மழைக்கண்ணா------திருப்பாவை

Image
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்------திருப்பாவை

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம்

Image
புரட்டாசி மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, பாத யாத்திரையாக சென்று சனிக்கிழமையன்று பாலாஜியை தரிசித்து யாத்திரையை முடித்துக் கொள்ளும் வழக்கம் பேருந்து இல்லாத அந்தக் காலத்திலேயே இருந்தது.  தற்போது சகல வசதிகளும் உள்ள இந்த நாள்களிலும் பாத யாத்திரை தொடர்வது தான் வேங்கடவனின் மகிமைக்குச் சான்று. சென்னையிலிருந்து திருப்பதிக்குப் பாதயாத்திரை மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புரட்டாசி  மாத சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு பல நலன்களையும் வளங்களையும் வாரி வழங்குகிறார் திருப்பதி பாலாஜி. காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு நீராடி நெற்றியில் மதச் சின்னத்தை அணிய வேண்டும். சுத்தமாக ஆடை அணிந்திருத்தல் அவசியம். பூஜை அறையில் வெங்கடாஜலபதியின் உருவப்படம் அல்லது உருவச்சிலையை வைத்து முன்னே அமர வேண்டும். விளக்கை ஏற்றி, படத்திலும், விளக்கிலும் அலமேலு மங்கையுடன் கூடிய வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும். துளசியால் அர்ச்சனை செய்வது அவசியம். பின்தூபதீபம் காட்ட வேண்டும். பால், பழம், பாயாசம், கற்கண்டு, பொங்கல் ஆகியவற்றை நிவேதனப் பொருட்களாக படைக்க வேண்டும். வெங்கடாஜலபத

திருச்சிற்றம்பலம்

Image
திருச்சிற்றம்பலம் தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செய்திகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

Image
திருச்சிற்றம்பலம்--------- -------------------------- -------------------------- ---"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" - (திருவா. போற்றி.164, 165) என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது.

சைவ சமயம் புராதனமான சமயம்

Image
சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன

வேதம் பொதுவானது

Image
வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார் ” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார். தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர்.  “வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான்

மந்திரவடிவானவன்

Image
வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவன் என்று இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பின்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவென்று ஆகமங ்கள் பறைசாற்றுகின்றன. சைவசித்தாந்த ஆகமங்களில், குறிப்பாக சந்திரஞானம், யோகஜம், வீராகமம், வித்தியாபுராணம், வாயுசங்கிதை முதலியனவும், சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகியனவும் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளை விரித்துக் கூறுகின்றன. ஏனைய ஆகமங்கள், குறிப்பாக மதங்க்பாரமேசுவரம், மிருகேந்திரம், காமிகம் முதலியன பிராஸாதமந்திரத்தைச் சிறப்பிக்கின்றன. அதிலும் மதங்கபாரமேசுவரம் வியோமவியாபி மந்திரத்தையே தீ¨க்ஷ முதலிய கிரியைகளில் சிறப்பித்துக் கூறுகின்றது. வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவினன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் இல்லை என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. ஐந்தெழுத்

வேதங்கள்

Image
பாரதநாட்டு சமயம் மற்றும் அனைத்துக் கலாசாரக் கோட்பாடுகளுக்கும் வேதங்கள் ஆணிவேராகத் திகழ்கின்றன. தெய்வவழிபாட்டிற்கும் தத்துவக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் வேதங்களும் அவற்றை சார்ந்த நூல்களும் அடித்தளமாக அமைந்து அவற்றின் மேல் தொடக்கமில் காலந்தொட்டு பல பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்துவந்துள்ளன; இக்காலத்தும் அவ்வாறே நிகழ்ந்துவருகின்றன என்பதையும் எல்லோரும் அறிவர். வேதங்களைப் போன்றே ஆகமங்கள் என்றழைக்கப்படும்  நூல்களும் நம்நாட்டுச் சமயவளர்ச்சிக்கும் அதைச் சார்ந்த கலைகளின் வளர்ச்சிக்கும் வேதநெறியுடன் சேர்ந்து பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இவ்விரு வகைப்பட்ட நூல்களும் பரமகாருண்யமூர்த்தியான சிவபெருமானால் அருளப்பட்டன என்பது சிவநெறியைப் பின்பற்றும் சான்றோர்களின் துணிபு. வேதங்கள் பொதுநூல்களாகவும், ஆகமங்கள் அவ்வச்சமயங்களைப் பின்பற்றுவோருக்குரிய சிறப்பு நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன

சேயோன்

Image
சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக,  தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறது. எக்கணமும் யோகநிலையில்

பசுபதி முத்திரை

Image
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பெற்ற தியானத்திலுள்ள பசுபதி சின்னத்தின் மூலமே சிவவழிபாடு. அப்பகுதியிலேயே முதன்முதலில் சிவவழிபாடு நடைபெற்றிருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கூற்றாகும். பசுபதி முத்திரை தொன்மையான மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின் பொழுது கண்டுபிடிக்கப்பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளார்கள்.

நடராசன்

Image
நடனக்கலைகளின் தந்தையான சிவபெருமானின் நடனமாடும் தோற்றம் நடனராசன் எனப்படுகிறது. இது மருவி நடராசன் எனவும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானில் பலவகையான நடனங்களில் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் நிகழ்கின்றது. சிதம்பரம் கோவிலில், நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. இங்கு உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை அர்ப்பணமாக வழங்குகின்றனர். கலைஞர்கள் இங ்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை ஒரு பெருமையாக கருதுகின்றனர். கல்வெட்டுகள்:பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவனைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு பணி புரிந்துள்ளனர், இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் வழிப்பட்டதாகவும் பணிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.

செம்பியன்

Image
செம்பியன் என்பவன் சோழர் குலத்தின் முன்னோனாக கருதப்படுகிறான். இந்திர விழாவை இவனே ஆரம்பித்தான். புறாவிற்காக சதையை அறுத்துக்கொடுத்தவன் என்று கூறப்பெறுகிறான். இவனின் கதை வடபாரத சிபி மன்னனோடு ஒத்துப்போவதால் இருவரும் ஒருவரே என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கலிங்கத்துப் பரணி கூறும் அக்கால அரசர் வாழ்க்கை

Image
கலிங்கத்துப் பரணி கூறும் அக்கால அரசர் வாழ்க்கை------ கலிங்கத்துப் பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். இந்நூலில் அக்கால அரசர் இயல்புகளும் அக்காலப் போர் முறைகளும் சமுதாய நிலைகளும் கூறப்பட்டுள்ளது. படைக்கலப் பயிற்சி------ அக்கால அரசர்கள் தினந்தோறும் படைக்கலப் பயிற்சி பெற்றனர். அவ்வாறு பயிற ்சி முடிந்த பின் தம் அரையிலே (இடையில்) உள்ள உறையில் அதனைப் பூணும் வழக்கம் இருந்தது. அரசவை------ அரசு வீற்றிருக்கும் போது அரசனின் தேவியரும் உடன் இருத்தல் வழக்கம். அரசனுக்கு சேவையாற்ற 'அணுக்கிமார்' எனப்படுவோர் இருந்தனர். இவர்கள் நாடகம், நிருத்தம் முதலியவற்றாலும், பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி எனும் நால்வகைப் பண்ணிலும் வல்லவர்களாய் ஆடல் பாடல்களில் சிறந்திருந்தனர். இவர்களும். யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக்கருவி வல்லார் பலரும் அரசவையில் ஒரு பக்கத்தே இருப்பர். அரசன் புகழ் பாடுவோராகிய சூதர், மகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதளிகர் என்போரும் அரசவையில் இருந்தனர். அரசனுக்குப் பிறர் வி

முற்காலச் சோழர்கள்

Image
முற்காலச் சோழர்கள்------ மூவருலாவில் அடங்கியுள்ள விக்கிரம சோழன் உலா நூலில் அந்த நூலின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழனுக்கு முன்னர் ஆண்டதாகச் சோழர் பரம்பரை ஒன்றைக் குறிப்பிடுகிறார். அவர்களில் பழங்கதைகளாகத் தெரியவரும் சோழர்களைத் தொன்மச் சோழர் எனக் குறிப்பிடுகிறோம். இவர்களில் வரலாற்றுச் சோழர்களாத் தெரியவரும் சோழர்களும் உள்ளனர். .சோழ அரசர்கள்------ பிரமன்--, உலகம் படைத்தவன் காசிபன்,-- பிரமன் மகன ் மரீசி, --மேதக்க மையறு காட்சியன் சூரியன்,-- எல்லாளன்,-- ஒற்றைச் சக்கரத் தேரில் வருவோன் மனுச்சோழன்,-- பசுவுக்கு நீதி வழங்கியவன் ஆடுதுறை அறனாளன், --புலியும் மானும் ஒரே துறையில் நீருண்ணச் செய்தவன் வானூர்தி அரசன் தேவருலகைக் காத்தவன் வேள்வியில் பெற்ற மந்திரத்தைக் கூற்றுவனுக்குச் சொல்லிக்கொடுத்தவன், முதுமக்கள்-தாழி செய்தளித்து எமனை வென்றவன் தூங்கும் எயில் எறிந்த சோழன் மேலைக்கடல் நீரைக் கீழைக்கடலில் பாயச்செய்தவன் நாக-கன்னியை மணந்தவன், குகை வழியே நாகலோகம் சென்றவன் சிபிச் சக்கரவர்த்தி, தான் வளர்த்த புறாவுக்காகத் தன்னையே தராசில் நிறுத்துப் பருந்துக்கு இரையாக அளித்தவன் காவிரி தந்தவன், குடகு மலையை

சோழர் குடிப்பெயர்கள்

Image
சோழர் குடிப்பெயர்கள் கிள்ளி, செம்பியன், சென்னி, வளவன், வளத்தான் என்பன சோழ மன்னர்களின் குடிப்பெயர்கள். மக்களுக்குப் பெயர் எந்தெநத அடிப்படையில் அமையும் என்பதை வகுத்துக் காட்டும்போது தொல்காப்பியம் குடிப்பெயர் என்பதனையும் குறிப்பிடுகிறது. மலையமான், சேரமான் என்னும் பெயர்களை எடுத்துக்காட்டாக இதற்கு உரையாசியர்கள் தருகின்றனர் கிள்ளி சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவ ன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி நெடுங்கிள்ளி செம்பியன் துலை புக்க செம்பியன் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் சென்னி சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி புறநானூறு 203 சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி பெரும்பூட் சென்னி வளவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் க

சங்க காலச் சோழ வேந்தர்

Image
சங்க காலச் சோழ வேந்தர் 18 பேரைக் கால வரிசைப்படுத்திக் கா. சுப்பிரமணிய பிள்ளை ‘இலக்கிய வரலாறு’ என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அதனையும், கலைக்களஞ்சியம் காட்டும் காலத்தையும் ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில ் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். மேலும் பிற்காலச் சோழர் 28 பேரின் ஆட்சிக் காலமும் அதில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம். இதில் சோழ மண்டலத்தின் வடபகுதியில் ஆண்ட இருவர் பிற்காலச் சோழர் ஆகியோரின் காலக் குறிப்புகளும் உள்ளன.

மூவருலா

Image
மூவருலா தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. (எனவே மூவருலா எனப்படுகிறது). இம்மூவரையும் பற்றி முறையே 342, 387, 391 பாக்கள் இந்நூலில் உள்ளன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை (கலிவெண்பா வில் ஒரே எதுகை வருபவை). சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று, ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன. இந்த உலாக்களின் பாட்டுடைத் தலைவர்களின் ஆட்சிக்காலம். விக்கிரம சோழன் 1118-1136 குலோத்துங்க சோழன் 1133-1150 இராசராசன் உலா 1146-1163

பசும்பூண்

Image
பசும்பூண் என்பது மார்பில் அணியும் பச்சைநிறப் பூண். இந்தக் கவசப் பூண் போரின்போது இவன் அரசன் என்பதைக் காட்டுவதாய் அமைந்தது. இதனை இங்கு வரும் சொல்லாட்சிகளால் உணரலாம். பசும்பூண் வேந்தர் [1] பசும்பூண் சோழர் [2] பசும்பூண் கிள்ளிவளவன் [3] பசும்பூண் ஆதன்ஓரி [4] பசும்பூண் செழியன் [5] பசும்பூண் பாண்டியன் [6] பசும்பூண் பொறையன் [7]

சிலப்பதிகாரம்

Image
சிலப்பதிகாரம்------ செங்கோலை அரசன் கையில் வைத்திருப்பான். சோழ மன்னன் தலைக்கோலை --ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு வழங்கி அவளைப் பெருமைப்படுத்தினான். ] இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகாரக் கண்ணகி தான் பிறந்த புகார்நகர அரசர்களின் செங்கோல் வழாநிலையை, செங்கோல் வழுவிய பாண்டியனிடம் சொல்லி வழங்குரைத்தபோது, சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் ஆகிய சோழ வேந்தர்களை எடுத்துக் காட்டுகிறார்.

வல்லவரையன் வந்தியத்தேவன்

Image
வல்லவரையன் வந்தியத்தேவன்------ சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இ ருந்தனர். வாணர்கள்------ "சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி!" "என் கவிகை என் சிவிகை என் கவசம் என்துவசம் என்கரி யீ(து) என்பரி யீது என்பரே - மன்கவன மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசு பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!" "வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன் வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு!" என்று பாடல்களால் போற்றப்படும் வாணர் குலத்தில் பிறந்தவர் வந்தியத்தேவர். நூல்கள்------ வந்தியத்தேவனை கதைபாத்