வேதங்கள்
பாரதநாட்டு சமயம் மற்றும் அனைத்துக் கலாசாரக் கோட்பாடுகளுக்கும் வேதங்கள் ஆணிவேராகத் திகழ்கின்றன. தெய்வவழிபாட்டிற்கும் தத்துவக் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கும் வேதங்களும் அவற்றை சார்ந்த நூல்களும் அடித்தளமாக அமைந்து அவற்றின் மேல் தொடக்கமில் காலந்தொட்டு பல பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்துவந்துள்ளன; இக்காலத்தும் அவ்வாறே நிகழ்ந்துவருகின்றன என்பதையும் எல்லோரும் அறிவர். வேதங்களைப் போன்றே ஆகமங்கள் என்றழைக்கப்படும் நூல்களும் நம்நாட்டுச் சமயவளர்ச்சிக்கும் அதைச் சார்ந்த கலைகளின் வளர்ச்சிக்கும் வேதநெறியுடன் சேர்ந்து பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இவ்விரு வகைப்பட்ட நூல்களும் பரமகாருண்யமூர்த்தியான சிவபெருமானால் அருளப்பட்டன என்பது சிவநெறியைப் பின்பற்றும் சான்றோர்களின் துணிபு. வேதங்கள் பொதுநூல்களாகவும், ஆகமங்கள் அவ்வச்சமயங்களைப் பின்பற்றுவோருக்குரிய சிறப்பு நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன
Comments
Post a Comment