மூவருலா



மூவருலா தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. உலா சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது. விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவரையும் புகழ்ந்து பாடியது. (எனவே மூவருலாஎனப்படுகிறது). இம்மூவரையும் பற்றி முறையே 342, 387, 391 பாக்கள் இந்நூலில் உள்ளன. இவை அனைத்தும் கண்ணி வகையைச் சேர்ந்தவை (கலிவெண்பா வில் ஒரே எதுகை வருபவை). சோழர் குலச்சிறப்பு, அரசர் பெருமை, பள்ளி எழுதல், அழகு செய்தல், யானையின் மீது அமர்தல், உடன் வருவோர், அவர்கள் கூற்று, ஏழுவகைப் பருவ மகளிரின் அழகு, உணர்ச்சிகள், விளையாட்டுகள், காமுறுதல், பேசுதல் போன்ற செய்திகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் பகுதிகளான மூன்று உலாக்களும் தனி நூல்களாகவும் கருதப்படுகின்றன.

இந்த உலாக்களின் பாட்டுடைத் தலைவர்களின் ஆட்சிக்காலம்.

விக்கிரம சோழன் 1118-1136
குலோத்துங்க சோழன் 1133-1150
இராசராசன் உலா 1146-1163

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்