Posts

Showing posts from December, 2014

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

Image
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாராயணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய் .

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

Image
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

"வேலு நாச்சியார்"

Image
- "வேலு நாச்சியார்" ----வடநாட்டில் ஜான்சி ராணி தோன்றுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர். ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1783 முடிசூட்டு விழா கி.பி 1780 பிறப்பு 1730 பிறப்பிடம் இராமநாதபுரம் இறப்பு 25 டிசம்பர், 1796 முன்னிருந்தவர் முத்து வடுகநாதர் அரச வம்சம் சேது மன்னர் உலகையே அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் காரர்களை அடக்கி மண்டியிட வைத்தவர். வெள்ளையர்கள் மன்னிப்பு கேட்ட ு பட்டயம் அனுப்பியது மகாராணி வேலுநாச்சியாரிடம் மட்டும் தான் .வெள்ளையரை போரில் வென்ற முதல் மகாராணியும் இவர்தான். . "வேலு நாச்சியார்" இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி என்னும் ஊரில் மன்னர் விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி மற்றும் முத்தாத்தாள் நாச்சியாருக்கு பிறந்தவர். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற் போல், வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் பத்து மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவர். இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம் பெண் வே

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்

Image
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே 4 கிமீ தொலைவில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில். கோயில் மண்டபங்களின் மேல் கூரையிலும் தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள். ஒரு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள குட்டி 'மினியேச்சர்' சிற்பங்களும் உண்டு. இரண்டாம் ராஜராஜ சோழனால் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோயிலைத் தன் உயிரைக் கொடுத்துக் கட்டியிருக்கிறான் இந்த சோழ மன்னன். இவனுடைய முன்னோர்கள ் ராஜராஜன் தஞ்சை கோயிலை 13 அடுக்கு கோபுரத்துடனும் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் 9 அடுக்கு கோபுரத்துடனும் சிவன் கோயில்களை அமைத்தனர். ஆனால் இரண்டாம் ராஜராஜன் ஐந்து அடுக்குகளுடன் ஐராவதேஸ்வரர் கோயிலின் கோபுரத்தை அடக்கமாக உருவாக்கினான். ஆனால் உள்ளே தேர்வடிவ முக மண்டபத்தை எழுப்பியும் காலத்தால் அழியாத அரிய சிற்பங்களையும் தூண்களையும் உண்டாக்கியும் தன் கலைச்செறிவினால் வரலாற்றில் தனியிடம் பெற்றான். ராஜராஜனும் ராஜேந்திரனும் "மகேஸ்வர சிவம்" என்னும் சிவனே உயர்ந்தவன் என்னும் கொள்கையைத் தழுவி, அதைப் போற்றும் வகையில் தங்கள் கோயில்களைக் கட்டி

தில்லை நடராஜர் கோயில் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது

Image
தில்லை நடராஜர் கோயில் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது..சிதம்பரம் , "தில்லை" என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

தில்லை நடராஜர் கோயில்

Image
தில்லை நடராஜர் கோயில்------இக்கோயிலில் பிற்காலச் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜாதிராஜ தேவன், மூன்றாங் குலோத்துங்கசோழதேவன், மூன்றாம் இராஜராஜ சோழன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியமன்னர்களில் திரிபுவனச்சக்கர வர்த்தி வீரபாண்டியதேவன், சடாவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவன், மாறவர்மன் திரிபுவனச்சக்கரவர்த்தி வீரகேரளனாகிய குலசேகரதேவன் இவர்கள் காலங்களிலும், பல்லவரில் அவனி ஆளப்பிறந்தான் கோப்ப ெருஞ்சிங்கதேவன் காலங்களிலும், விசய நகர வேந்தர்களில் வீரப்பிரதாபகிருட்டிணதேவமகாராயர், வீரப் பிரதாப வேங்கடதேவமகாராயர், ஸ்ரீ ரெங்கதேவமகாராயர், அச்சுத தேவமகாராயர், வீரபூபதிராயர் இவர்கள் காலங்களிலும், கொச்சி பரம்பரையில் சேரமான் பெருமாள் நாயனாரின் வழித் தோன்றிய இராமவர்ம மகாராசா காலத்திலும்; சாளுவ பரம்பரையில் வீரப் பிரதாபதம்முராயர் I காலத்திலும் செதுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளையன்றி இக்கோயிலைப் பற்றி வேற்றூர்களில் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் இருக்கின்றன. .

மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில்

Image
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.

நடராசர் கோவில்

Image
பிரமாண்டமான பழமையான நடராசர் கோவில் 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.பரத நாட்டிய கலையின் 108 வகை தோற்றங்கள் இந்த கோவிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இக் கோயிலின் கூரையை தங்க தகடுகளால் சோழன் குலோத்துங்கன் அமைத்துள்ளான். சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சீர்காழியில் பிரமபுரீஸ்வரர்,சட்டநாதர், கோனியம்மன் திருநிலை நாயகி கோவில்கள் உள்ளன.

சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம்

Image
சைவப்பெரியோர்களான நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது பாடல் பெற்ற தலம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பஞ்சபூதங்களில் ஒன்று எனக்கூறப்படும் ஆகாசம் வடிவில், சிவன் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் சிதம்பர ரகசியம் அமைக்கப்பட்டுள்ளது. இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இன்றும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வரப்படுகிறது. சிதம்பரம் கோயில் வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக்கூடம் என்ற சபையில், நடராசரின் கனகசபைக்கு வெகு அண்மையில் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச்சித்திரக்கூடம் பற்றி குறிப்பு உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபம், சிற்பக்கலைக்கும், கட்டடக் கலைக்கும் பெயர் பெற்றது. இதை நிபுணர்கள் கட்டடக்கலையின் அற்புதம் என்று புகழ்கின்றனர். சைவ சமயத்தவர்களுக்கு கோயில் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலையே குறிக்கும். அந்தளவுக்கு சைவமும் சிதம்பரமும் பிணைந

ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி

Image
ஆங்கிலப்புத்தாண்டு------கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்ட ில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்

தில்லை நடராஜர் கோயில்------மூர்த்திகளின் பெயர்கள்

Image
தில்லை நடராஜர் கோயில்------மூர்த்திகளின் பெயர்கள் இப் பெரும்பற்றப்புலியூரில் மூலத்தானத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருமூலத்தானமுடையார் என்றும், பேரம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் ஆளுடையார் என்றும், சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவர் திருச்சிற்றம்பலமுடையார், தில்லை நாயகத் தம்பிரானார், ஆநந்தத்தாண்டவப்பெருமாள், பொன்னம்பலக்கூத்தர், சிதம்பரேசுவரர் என்றும், அம்மன் சிவகாமசுந்தரியார் என்றும், அம்மனுக்குரிய திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாய்ச்சியார் என்றும் கல்வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளனர்.