Posts

Featured post

ராஜ ராஜனின் வெற்றிகள்

Image
ராஜ ராஜனின் ஆட்சித்திறனுக்கு அப்பால் அவன் போரில் கண்ட வெற்றிகள் மட்டுமே எந்தப்பேரரசனும் கண்டிராத வெற்றிகள் எனத்துணிந்து கூறலாம்.உண்மையில் ஹானிபல்.சீசர்,அலெக்ஸாண்டர்,நெப்போலியன் ஆகியோரை மிஞ்சக்கூடிய அளவிற்கு ராஜ ராஜன் தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி கண்டான்.இவனுடைய படை மகா சேனை என அழைக்கப்பட்டது. காலாட்படை,குதிரைப்படை.யானைப்படை எண்ணற்றவை.20 லட்சம் வீரர்களும் அறுபதாயிரம் யானைகளும் எண்ணற்றக்குதிரைகளும் இருந்ததாகக்கூறப்படுகிறது.அதல்லாமல் 600 போர்க்கப்பல்கள் இருந்தன.அந்தக்காலத்தில் எவ்வித தொலைத்தொடர்புக்கருவிகளும் இல்லை.எப்படி இவர்களை நிர்வாகம் செய்தான் என்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஏதோ ஒரு சிற்றரசன் அவன் மெய்க்கீர்த்தியில் ராஜ ராஜன் வெற்றிளைத்தொகுத்து தந்துள்ளான்............................".காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி,............வேங்கை நாடும் கங்கை பாடியும்,..........தடிகை பாடியும் துளம்ப பாடியும்,..........குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்,..........முரண் தொழில் சிங்களர் ஈழ மண்டலமும்,..........இரட்ட பாடி ஏழரை இலக்கமும்,.......... முன்னீர்ப் பழ்ந்தீவுப் பன்னீராயிரமும் கொண்டு , த
Image
. "கட்டோடு குழலாட ஆட..." எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை ! அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள். எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார். 'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது. இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர். இதுதான் காட்சியமைப்பு. கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர் கண்களுக்குள் தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின. எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு. கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து, தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார். கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை ! "தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்க

ஓம் ஸ்ரீ மீனாம்பிகை

Image
ஓம் ஸ்ரீ மீனாம்பிகை                போற்றி  ஆடி முளைக்கொட்டு விழாவில் அன்னை  பூப்பல்லக்கு சேவை மாதர்கள்    குலத்திலக      மரகத        மணியே! நாதர்தன்    அகந்திகழும்      நாணிலத்        தொளியே! வேதியர்     உளந்திகழும்      மாணிக்க        விழியே! பூதொடு    ரதந்திகழும்       புண்ணிய         வழியே...! 🌹மதுரை  

ஆடி மாதம்

Image
  அற்புதமான மாதம்: ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம். இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை.

ஜெய் ஸ்ரீராமஜெயம் !!

Image
*ஸ்ரீ ராமஜெயம்* *முதலில் எழுதியது யார்..!?* போரில் ராவணனை வீழ்த்திய ராமர், இந்த நல்ல செய்தியை யார் சீதையிடம் சென்றுக்கூறுவது என்று யோசிக்கும்பொழுது,  நான் நீ என்று பலர் முன்வந்தார்கள். ஆனால் ராமரோ ஆஞ்சநேயர்தான் இதற்குச் சரியான ஆள் என்று அனுமனிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார் ! ராமரின் ஆணையை சிரமேற்கொண்டு சீதையின் இருப்பிடத்திற்கு வந்த ஆஞ்சநேயருக்கு, சந்தோஷ மிகுதியால்  பேச முடியவில்லை.  கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. இதைக் கண்ட சீதைக்கோ ஏன் அனுமனின் கண்களில் கண்ணீர் என்ற கவலை ! இதை சட்டென்று புரிந்துகொண்ட அனுமன், சந்தோஷத்தில் வாய் பேச முடியவில்லை என்றால் என்ன,  ராமர் வெற்றி பெற்ற நற்செய்தியை எழுதி காண்பிக்கலாமே என்று  *"ஸ்ரீ ராமஜெயம்"* என்று மண்ணில் எழுத, அதைப்படித்த சீதாப்பிராட்டியாரும் செய்தியறிந்து சந்தோஷமடைந்தார்...! *ஜெய் ஸ்ரீராமஜெயம் !!  

பூண்டி ஐயா

Image
 தஞ்சை மாநகரத்தின் பெரும் பகுதி ஜமீனாக இருந்த #துளசி_அய்யா_வாண்டையார் குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டது தான். அவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம்  கல்லூரியில் செயலாளராக இருந்து கடைசி வரை ஒரு பைசா கூட நன்கொடை வாங்காமல் தமிழகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் கல்வி பயில்வதற்கு வித்திட்டவர். அவரது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் பல அரசு பதவிகளில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனால் டெல்டா பகுதியில் துளசி அய்யா வாண்டையாரை `#கல்வி_காவலர்’ என்றே அழைக்கின்றனர்.      காந்திய கொள்கையை உறுதியாக பற்றி கொண்டு கடைசி வரை கடைபிடித்தவர். #காந்தி வெள்ளிக் கிழமையில் சுட்டுக் கொல்லப்பட்டதால் அன்றைய தினம் முழுவதும் மெளன விரதம் இருப்பதை கடைசி வரை கடைபிடித்து வந்தார். உணவு கட்டுப்பாடு, யோகா, தினசரி மூச்சு பயிற்சி என எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், கடைசி வரை மருத்துவமனைக்கு பக்கமே எட்டி பார்க்காமல் ஆரோக்கியமாக வாழ்ந்தவர். .      தனக்கு யாரேனும் பரிசு கொடுத்தால் அதை விட கூடுதலான பரிசை கொடுத்து அன்பால் திணறடிப்பார். நேரம் தவறாமைக்கு உதாரணமாக இருப்பார்.

துளசி ஐயா வாண்டையார்

Image
 கல்வித் தந்தை பூண்டி அய்யா மறைந்தார்.......🙏🙏🌸🌺🙏🙏                     உச்சி  வெயிலுல செல்லாத்தா... நம்ம உச்சந்தல கருகல. கொட்டுற மழையில செல்லாத்தா... நம்ம குடுசைங்க ஒழுகல. ஆண்டவனை வேண்டல செல்லாத்தா... மாண்டவனை வேண்டல. வாண்டையாரு வடிவத்தில செல்லாத்தா... வணங்குவோம்டி கடவுள!' நாற்று நடவு செய்யும் பெண்கள், அலுப்புத் தெரியாமல் இருக்க பெருங் குரலெடுத்துப் பாடுகிறார்கள் இன்றும் பூண்டியிலே. சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. வளநாடுகள், நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. “அருள்மொழித்தேவன் வளநாடு - ராஜராஜன் வளநாடு - ராசாச்சரயன் வளநாடு - கேரளாந்தகன் வளநாடு” என்று பிரிக்கப்பட்டபொழுது, ‘நித்தவினோத வளநாடு’ என்று ஒரு பகுதி அறிவிக்கப்பட்டது. அந்த நித்தவினோத வளநாடுதான் பூண்டி மண்டலம். அந்த நித்தவினோத வளநாடுதான் சரித்திரப் பிரசித்திப்பெற்ற வெண்ணிப் பரந்தலைப் போர் நடைபெற்ற இடம். கரிகாற்பெருவளத்தான் வாளின் வீரம் நிர்ணயிக்கப்பட்ட இடம் வெண்ணிப்பரந்தலை. அதற்குப் பெயர் வெண்ணிக்கூற்றம். இந்தத் தஞ்சையில் எழுப்பப்பட்டு இருக்கிற பிரகதீஸ்வரர் ஆலயம், பொன்னியின் செல்வன் கட்டி

ஆதி சங்கரர்ஜெயந்தி

Image
 ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்  நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்..!! வேதம், வேதாந்தம், புராணம் ஆகியவைகளின் இருப்பிடமாக இருப்பவரும்,  அனைவருக்கும் எப்பொழுதும் மங்களங்களை அருள்பவரும்... கருணாமூர்த்தியான சங்கரரின் பாதாரவிந்தங்களைப் பணிகிறேன்...! இன்று  ஆதிசங்கரர் ஜெயந்தி ...!!