ஆண்டாள் ஆடிப்பூரம்
ஆடிப்பூரம்...*
பாண்டிய தேசத்து ஸ்ரீ வில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்;
திருவாடிப்பூரத்தில், கோதையாய் அவதரித்து,
ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் வரித்து,
தினம் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கிய,
கோதையே,
கம்பீரமான குணங்களை உடைய ரங்கனுக்கு இனிய பத்தினியாய்,
ரங்கநாதருடன் ஐக்கியமாகி அவரையே ஆண்டவள் - ஆண்டாள்!
ஆடி மாதப் பூர நன்னாளில் மிகப்பெருமையுடைய ஸ்ரீவிஷ்ணு சித்தரின் பெண்ணாக, கோதாதேவி அவதரித்தார்.
ஆண்டாளின் 'ஞானபக்தி' அளவிட முடியாதது.
பெரியாழ்வாரும், 'கோதைக்குகந்த மணாளன் கோயிற் பிள்ளையான நம்பேருமானே' என எண்ணினார்.
ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கச் செல்வன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார்.
அதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார்.
'ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்' என்ற பெரியாழ்வாரின் பாடலுக்கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.
ராமனுஜர், ஆண்டாளின் சகோதரர் எனப்பட்டார்.
மாயனைக் கனவில் மணப்பதாக பாடிய இவரது 'திருப்பாவையைப்'; பாடாத, நாச்சியார் திருமொழியில் 'உள்ள வாரணமாயிரம்' பாடாத திருமணங்களே இல்லை.
ஸ்ரீ ஆண்டாள் ரங்கனை மணந்தாலும், திருப்பாவைத் தனியன்கள் முழுவதும் பெருமாளுக்காகவே பாடி அருளியதால் இவரும் ஆழ்வாரானார்.
'இன்றும் இவரது எட்டாம் திருமொழியான 'விண்ணீல மேலாப்பு' என்ற 'தனியனை' மக்கள் யாவரும் சேர்ந்து அனுசந்தித்தால் (பாடினால்) 'மழை' வருவது திண்ணம்.
Comments
Post a Comment