விஷ்ணு

*🐚 விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும்... அறியாததும்...!* காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். *🐚 திருமாலின் ஏகாதசி* : ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைபட்ட எல்லா சுபக்காரியங்களையும் நடத்தித் தந்து அருளுவார் திருமால். *🍃 துளசி* : திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். *நரசிம்மர் வழிபாடு :* நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும். நரசிம்மரை தொடர்ந்து வழிபடுவதால் பில்லி, சூனியம், செய்வினை, எதிரிகளால் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பார். சந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மரை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திர தினத்தன்று பூஜித்து வந்தால் கடன்கள், நோய்கள், திருமணத் தடை தீரும். நரசிம்மரை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வும், வளமான வாழ்க்கையையும் பெறலாம். *ஆஞ்சநேயர்* : ஆஞ்சநேயரை சாந்த வடிவில்தான் வழிபட வேண்டும். மஞ்சள் கலந்த குங்குமம், துளசி, வெண்ணெய் போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். அனுமனின் அருள் வேண்டுபவர்கள் இராம மந்திரத்தை தினசரி கூறினால் போதும். *விஷ்ணுவின் சிறப்புகள் :* விஷ்ணு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்தம், மஞ்சள் காப்பு, திருத்துழாய், சிவப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. சடாரி பக்தர்களின் தலையில் வைப்பது திருமாலின் திருவடியே நம் தலையில் படுவதாக ஐதீகம். திருமாலின் உடலிலிருந்து உருவானதே எள்ளும், தர்ப்பையும். சிரார்த்த காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் விஷமிகள் விரட்டியடிக்கப்படுவார்கள். மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் எள்ளிற்கு உண்டு. தர்ப்பை உபயோகிக்காமல் செய்யும் கர்மாக்கள் முழுமை பெறாது என்பது ஐதீகம். கோவில்களில் வலம் வரும்போது திருமாலுக்கு 4 முறையும், லட்சுமிக்கு 4 முறையும், ஆஞ்சநேயருக்கு 11 அல்லது 16 முறையும் பிரதட்சிணம் செய்ய வேண்டும். திருமால் கோவிலுக்கு சென்று முதலில் அவரின் முகத்தை பார்த்து வணங்கக்கூடாது. முதலில் அவரின் திருவடிகளைப் பார்த்து வணங்கிய பின்னரே படிப்படியாக அவரின் முகத்திற்கு வர வேண்டும். *திருமால் கோவில்களில் அவ்வாறு அமர வேண்டிய அவசியமில்லை.* *மகாலட்சுமி தாயாரும்* *விஷ்ணுவின் தூதர்கள் வீடுவரையிலும் நம்மோடு வருவதாக ஐதீகம்.* பரந்தாமனை மனதார வழிபட்டு வாழ்வின் நலம் பல பெற்று வாழ்க வளமுடன் 🙏

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்