சடையவர்மன் சுந்தர பாண்டியன்

இராஜேந்திர சோழ தேவருக்கு பிறந்த நாள் கொண்டாடியது போல வரும் சித்திரை மூலம் நாளன்று சடையவர்ம சுந்தர பாண்டிய தேவருக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டும் ------------------------------------------------------------- சோழர்களின் பிற்கால எழுச்சியினை விஜயாலய சோழன் ஏற்படுத்தி வைத்தான் அவனின் வலுவான அஸ்திவாரத்துக்கு பின் மெல்ல மெல்ல சோழநாடு மேல் எழுந்தது . அதற்கு பாண்டிநாடும் சேரநாடும் பெரும் எதிர்ப்பை கொடுத்து கொண்டே இருந்தன, ஆதித்த கரிகாலன் பாண்டிய நாட்டை வென்றே தீருவது என கங்கணம் கட்டி வீரபாண்டியனை மதுரைக்குள் புகுந்து ஒழித்து கட்டியிருந்தான் . பதிலுக்கு பாண்டியரும் சேரரும் அவனை அவன் நாட்டில் ரகசியமாக புகுந்து தலைவெட்டி கொன்றனர் . அதன் பின் அரியணைக்கு வந்த ராஜராஜன் புலிபோல் நின்றான், அவனிடம் எந்த படையும் வெல்ல முடியவில்லை . காந்தளூர் சாலை என சேரரை நிர்மூலமாக்கிய அவன், பாண்டியரை முறியடித்து காலுக்கு கீழ் வைத்திருந்தான், இவர்களோடு கூட்டணிக்கு வந்த ஈழ அரசனை அனுராதாபுரத்தில் முறியடித்து போட்டிருந்தான் ராஜராஜன் காலத்தில் பாண்டியர் எங்கிருந்தார் என்பதே தெரியாது . ராஜராஜனுக்கு பின் அவன் மகன் ராஜேந்திர சோழன் எழும்பினான், . அவன் கொம்பாதி கொம்பனாக இருந்தன், தந்தையினை விட பலமடங்கு பாய்ச்சல் காட்டி தென் பாரதகண்டத்தையே ஆட்டி வைத்திருந்தான் கடல் கடந்தும் அவன் செல்வாக்கு இருந்தது . அவனுக்கு பின் சோழ வம்சம் மெல்ல சரிந்தாலும் மூன்றாம் குலோத்துங்கன் காலம் வரை சோழநாடு அசையாமல் இருந்தது . ஆனால் மூன்றாம் ராஜராஜனை ஓட அடித்து மதுரையினை மீட்டான் முதலாம் சுந்தர பாண்டியன், . மதுரை அவன் காலத்தில் மறுபடி பாண்டிநாடானது . பாண்டிகொடி பறந்ததே தவிர நிலையான உறுதியான ஆட்சியாளர்கள் இல்லை, இருப்பதை தக்க வைத்து கொண்டிருந்தார்கள் . அந்த சுந்தரபாண்டியனின் 6ம் வாரிசில் வந்தவனே ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் வரலாற்றில் மாபெரும் இடம் அவனுக்கு உண்டு, சந்தேகமின்றி சொல்லலாம் ராஜேந்திர சோழன் சோழர்குல அடையாளமென்றால் சடாவர்மன் பாண்டியரின் தனிபெரும் அடையாளம் . சோழ வம்சத்தை முற்றிலும் அடித்து வீழ்த்தி பழையாறையில் சாதாரண சிற்றரசர்களாக அவர்களை ஒடுக்கி வைத்திருந்தான் சடாவர்மன் . ராஜராஜசோழனின் மாபெரும் சாம்ராஜ்யம் அவனால் முடிக்கபட்டு பாண்டியர் கைக்கு வந்திருந்தது . சேரமன்னன் உதயமார்த்தாண்டனை ஓட அடித்திருந்தான் சடாவர்மன், அப்பொழுத் சேரநாட்டின் முக்கால்வாசி பகுதி இவனிடம்தான் இருந்தது, அந்த அளவு அடக்கி வைத்திருந்தான், பெரும் பணம் கப்பமாய் வந்தது . பாண்டியருகும் சேரருக்கும் தீரா பகை ஏற்படவும் இன்று "பாண்டி" என ஒருமாதிரி கேரளத்தவர் இழுக்க முதல் காரணமே ஜடாவர்மனின் படையெடுப்பே . இன்றைய சமயபுரமாகவும் அன்றைய கண்ணூராகவும் இருந்த கோட்டையினை ஹோய்சாள மன்னரான வீரசோமேசுவரன் என்பவனை அடித்த அடியில் ஹோய்சாள அரசு அவர்களின் பூர்வீகத்துக்கே ஓடிற்று கண்ணூர் பாண்டியர் கட்டுபாட்டில் வந்தது . ஹோய்சாளர்களின் பலமான தளபதிகளையெல்லாம் அவன் வென்று வீழ்த்திய அச்சத்தில் ஹோய்சாளர் அதன் பின் நெடுங்காலம் அப்பக்கமே தலைவைத்து படுக்கவில்லை . இலங்கை திரிகோணமலையினை கைபற்றி ஈழநாட்டை தனது அரசுடன் இணைத்த ஜடாவர்மன் அங்கிருந்து கடாரம் சென்று ஷயாம் (தாய்லாந்து) நாட்டையும் கைபற்றியிருந்தான் . சந்திரபானு எனும் தாய்லாந்து மன்னனும் அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டினார் . வட தமிழ்நாட்டிலும் கிழக்காசிய நாடுகளிலும் அதிகாரம் செலுத்திய பல்லவர்களை ஒழித்து கட்டிய ஜடாவர்மன் , . பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை தனக்கு உட்பட்ட சிற்றரசனாக்கி பெரும் கப்பம் பெற்றான் . கொங்கு நாட்டினை அந்நாட்டு அரசர்களான‌ வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி அசத்தினான் ஜடாவர்மன் . தென்னகம் முழுக்க அவன் கட்டுபாட்டில் வந்தபின் மெல்ல வடக்கே சென்றான் . தெலுங்கு மன்னர் விஜயகண்ட கோபாலனை எளிதில் தட்டி காஞ்சியினை பிடித்த அவன் அதற்கு அப்பால் செல்லும் பொழுது பெரும் அரசு இருந்தது . அது காகதீய பேரரசு . அந்த பேரரசை பெரும் போருக்கு பின் வீழ்த்தினான் ஜடாவர்மன், அதன் பின் அவன் ஆட்சி துங்கபத்திரா தாண்டி இன்றைய ஓடிசா வங்கம் வரை நீண்டது . அப்படியே பர்மா தாய்லாந்து என அவன் ஆளுகைக்குள் வந்தது . சுருக்கமாக சொன்னால் ராஜேந்திர சோழன் ஆண்ட பகுதியினையெல்லாம் அவனுக்கு பின் 200 ஆண்டுகள் கழித்து அதைவிட பெரிதாக ஆண்டு சரித்திரம் படைத்திருந்தான் சடாவர்மன் . அவனின் குறிப்பிடதக்க இன்னொரு அம்சம் சிவபக்தி, நல்ல இந்து அரசனாக சிவாலயங்களுக்கு மட்டுமல்ல வைணவ ஆலயங்களுக்கும் அள்ளி கொடுத்தான் . தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து அவனே, அந்த சான்று இன்றும் அங்கு உண்டு . அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் அவனே கட்டினான், . இன்றும் அதன் பெயர் சுந்தரபாண்டியன் கோபுரமே . ஸ்ரீரங்கம் கோவிலை அவன் மனமார நேசித்தான், சிவபக்தனாயினும் திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை பொன்னால் வேய்ந்தான் அவனின் முடிசூடும் விழா கூட அங்குதான் நடந்தது . கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான். . இன்றும் திருவரங்க ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் இவனது பெருமாள் சேவைகள் குறிக்கபட்டுள்ளன, பின்னாளில் திருவரங்கம் ஆலயம் பொன்னும் பொருளும் கொட்டி கிடக்கும் இடமாகவும் ஆப்கானியர் கண்களை உறுத்தும் விஷயமாகவும் மாற ஜடாவர்மன் முக்கிய காரணம் . தில்லை, திருவரங்கம் என பல கோயில்களுக்கு பொற்கூரை அமைத்ததால் "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான். . கோவில் நகரமான காஞ்சியில் அவனின் சேவை அதிகம் இருந்தது வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்கள் அவனை தேடி வந்தன‌ . "எல்லாந் தலையனானான்" அதாவது ராஜராஜன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். . கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான் .காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் அவனின் புகழ் செதுக்கபட்டுள்ளது, அது இப்படி பாடுகின்றது . "வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே" . ஆம் அவன் சமஸ்கிருதம் தமிழ் என இரண்டையும் நேசித்தான் வளர்த்தான். இரண்டையும் தன்னால் முடிந்தவரை வளர்த்திருந்தான் . அவனைபற்றிய கல்வெட்டுகள் இருமொழியிலும் பல இடங்களில் உண்டு . நெல்லையப்பர் கோவிலில் அவனின் திருபணிகள் ஏராளம், நெல்லையப்பர் கோவிலை விஸ்தரித்து பெரும் பரப்பளவில் அதை நிர்மானித்தான், இன்றிருக்கும் பிரமாண்ட நெல்லையப்பர் கோவில் அவனால் வந்தது அவனின் மெய்கீர்த்தி இப்படி தொடங்கும், மிக நீண்ட பாடல் அது, விரும்பினால் படியுங்கள் அவனின் வாழ்க்கை சுருக்கம் அதில் தெரியும் . அவனின் போரும் வெற்றியும் மிக மிக பெரியது என்பதால் மெய்கீர்த்தியும் நீண்டுவிட்டது . "ஸ்வஸ்திஸரீ பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ மையவர் கோன்அன்றிட்ட எழிலாரம் கழுத்திலங்கப் பகிரதிபோற் துய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் - 5 திகிரிவரைக் கப்புறத்துஞ் செழுந்திகிரி சென்றுலவத் தண்டரள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண்டிசைநடப்பச் செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத் திறற்புலிபோய் வனமடையக் . . . . . - 10 கயலிரண்டும் நெடுஞ்சிகர கனவரையின் விளையாட ஒருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோர் ஐவேள்வி யாறங்கமுடன்சிறப்ப அருந்தமிழும் ஆரியமு அறுசமயத் தறநெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் - 15 குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும் வச்சிரரும் காசியரும் மாகதரும் . . . அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய ருநிலமா முடிவேந்தர் றைஞ்சிநின்று திறைகாட்ட வடிநெடுவாளும் வயப்பெரும்புரவியும் - 20 தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனும் தானையும் செருக்களத் தொழிய வாரசும் புலரா மலைநாடு நூறப் பருதிமாமரபிற் பொருதிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்தோள்வலியிற் - 25 பொன்னி நாட்டு போசலத்தரைசர்களைப் புரிசையிலடைத்துப் பொங்குவீரப் புரவியும் செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய தண்டத் தலைவரும் தானையும் அழிபடத் துண்டித்தளவில் சோரி வெங்கலுழிப் - 30 பெரும்பிணக் குன்றம் ருங்களனிறைத்துப் பருந்தும் காகமும் பாறும் தசையும் அருந்தி மகிழ்தாங்கு அமர்கள மெடுப்பச் செம்பொற் குவையும் திகழ்கதிர் மணியும் மடந்தையர் ஆரமார்பும் உடன் கவர்ந்தருளி - 35 முதுகிடு போசலன் தன்னொடு முனையும் அதுதவ றென்றவன் தன்னை வெற்பேற்றி நட்பது போலுட் பகையாய் நின்ற சேமனைக்கொன்றுசினந்தணிந்தருளி நண்ணுதல் பிறரால் எண்ணுதற்கரிய - 40 கண்ணனூர்க்கொப்பத்தைக் கைக்கொண்டருளி பொன்னிசூழ் செல்வப் புதுப்புனல் நாட்டைக் கன்னி நாடென காத்தருள் செய்யப் பெருவரை யரணிற்பின்னருகாக்கிய கருநா டரசனைக் களிறுதிரை கொண்டு - 45 துலங்கொளி மணியும் சூழிவேழமும் லங்கை காவலனைக் றைகொண்டருளி வருதிறை மறுத்து அங்கவனைப்பிடித்துக் கருருமுகில் நிகளங் காலினிற் கோத்து வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் - 50 சேந்தமங்கலசெழும்பதிமுற்றிப் பல்லவன் நடுங்கப் பலபோ ராடி நெல்விளை நாடும் நெடும்பெரும் பொன்னும் பரும யானையு பரியு முதலிய அரசுரிமைக் கைக்கொண்டு அரசவற்களித்துத் - 55 தில்லையம்பலத்துத் திருநடம்பயிலுந் தொல்லை றைவர் துணைகழல் வணங்கிக் குளிர்பொழில் புடைசூழ் கோழி மானகர் அளிசெறி வேம்பின் அணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் - 60 திங்ளுயர் மரபு திகழவந் திருந்த தன்னசை யால்நன் னிலைவிசை யம்பின் எண்ணெண் கலைதேர் இன்மொழிப் பாவலர் மண்ணின்மே லூழி வாழ்கென வாழத்தக் கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப - 65 வெண்டிரை மகர வேலையி னெடுவரை ஆயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒருபெருங் கடவளும் வந்தினி துறையும் ருபெருங் காவிரி யிடைநிலத் திலங்கு - 70 திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலா பார மேறிப் பொன்மாலை யன்ன பொலிந்து தோன்றவும் பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெனத் - 75 திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை மரகத மலையென மகிழ்தினி தேறித் தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும் கனக மாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வேந்தர் உரிமை அரிவையர் - 80 ருமறுங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்த வாடையும் மலயத் தென்றலும் அந்தளிர்க் கரங்கொண்ட சைய வீச ஒருபொழு தும்விடாது உடனிருந்து மகிழும் திருமகளெனத் திருத்தோள் மேவி - 85 யொத்தமுடி சூடி யுயர் பேராணை திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த இவன்போ லுலகிலே வீரன் பலத்திற மதிமுகத் தவனி மாமகளிலகு கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் - 90 உலகமுழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய சிரீகோச் சடைய வன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள்சிரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு ஏழாவது கன்னி ஞாயிற்று அபர பட்சத்துத் திரியோதசியும் ஞாயிற்றுக் கிழமையும் - 95 பெற்றஅத்தத்துநாள்" . ஜடாவர்மனின் எழுச்சி வரலாற்றில் மிக மிக குறிப்பிடதக்க ஒன்று வடக்கே கிபி 1000ம் ஆண்டுகளில் ஊடுருவிய ஆப்கானியர் தெற்கே வர பெரும் அச்சம் கொடுத்தான் ராஜராஜன் அவனுக்கு பின் ராஜேந்திர சோழன் கொடுத்திருந்தான் . இந்த இருவரும் இல்லா காலத்தில் அவர்கள் வாரிசாக எழும்பி ஆப்கானியருக்கும் ஹோய்சாளருக்கும் சிம்ம சொப்பனமாக நின்றிருந்தான் ஜடாவர்மன் . ஜடாவர்மன் மட்டும் எழவில்லை என்றால் 1320களில் வந்த ஆப்கானிய ஆட்சி 1200களிலே வந்திருக்கும் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும் . ஜடாவர்மன் தொடங்கி வைத்த பாண்டிய பிடியில் இருந்துதான் விஜயநகர அரசு எழும்பி பின் சுல்தானியர்களை விரட்டிற்று . மதுரை கொடிய சுல்தானிய ஆட்சி வெறும் 47 ஆண்டுகளே, . ஒருவேளை ஜடாவர்மன் எழாமல் போயிருந்தால் அது 300, அல்லடு 400 வருடங்களாக நின்றிருக்கும், வரலாறு அதைத்தான் சொல்கின்றது . இவன் எழுப்பிய பேரரசின் செல்வ செழிப்பின் உச்சத்தில் குலசேகர பாண்டியன் ஆளும் பொழுதுதான் மார்க்கோ போலோ இந்தியாவுக்கு அதாவது மதுரைக்கு வந்து குறிப்புகள் எழுதினான் . இவனது அரசு தென்னிந்தியாவின் தனிபெரும் அரசாக இருந்தது நிலவழி வருமானம், ஆற்றுபாசான விளைச்சல், கடல் வணிகம், முத்து குளித்தல் வருமானம் என மிகபெரும் உன்னதமான இடத்தில் அவன் நாடு இருந்தது . அவன் தலைநகரமாக மதுரை விளங்கினாலும் திருச்சி கண்ணூர் கோட்டையிலும் இருந்து ராஜபரிபாலனம் செய்திருந்தான் . சைவமும் வைணவமும் தளைக்க மிகபெரிய காரியங்களை செய்திருந்தான் . இவன் ஏற்படுத்திய வளமான மிகபெரும் செல்வமான அரசே அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு நீடித்திருந்தது, அந்த அரசை குலசேகர பாண்டியன் ஆளும் பொழுதுதான் அவன் வம்சத்தில் வாரிசு பிரச்சினை வந்து ஒரு வாரிசு ஹோய்சால உதவியினை நாடபோய் கில்ஜியிடம் சிக்கி, கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் திருச்சியினையும் மதுரையினையும் சூறையாடினான் . அதன் பின் துக்ளக் வந்தான், அவனுக்கு பின் ஏற்பட்ட சுல்தானிய ஆட்சியினை விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்த்தி மதுரையினை ஆண்டது . தென்னிந்திய வரலாற்றில் ராஜேந்திர சோழனுக்கு நிகரான மாபெரும் வரலாற்றை உடையவன் முதலாம் ஜடாவர்ம பாண்டியன் . ஆனால் ராஜராஜனும் ராஜேந்திரனும் தெரிந்த அளவு தமிழருக்கு அவனை தெரியாது . காரணம் ராஜராஜனும் ராஜேந்திரனும் தனி தனி கோவில்களை கட்டி நகர்களை கட்டி அடையாளமிட்டனர், ஆனால் ஜடாவர்மன் தனக்கென தனி அடையாளம் தேடவில்லை இருந்த கோவில்களை விரிவுபடுத்தினான் கோபுரம் கட்டினான், பொற்கூரை வேய்ந்து அழகு பார்த்தான் . ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் வரலாறும் கடந்த நூற்றாண்டுவரை யாருக்கும் பெரிதாக தெரியாது, ஏன் தஞ்சை கோவிலை கட்டியதே ராஜராஜன் என்பதே நெடுங்காலம் தெரியாமல் இருந்தது . பின்னாளில் கல்கி போன்ற நாவலாசிரியர்கள் ராஜராஜன் , ராஜேந்திர சோழன் கதையினை பெரிதாக்கினர், பாலகுமாரன் போன்றவர்கள் அழியா காவியமாக்கினார்கள் . ஆனால் அதே நேரம் ராஜராஜன் புகழும் ராஜேந்திரன் புகழும் தஞ்சையில் வழிவழியாக கர்ண பரம்பரையாக காக்கபட்டன‌ . பாண்டிய நாட்டில் அப்படி இல்லை பாண்டியருகுள் பின்னாளில் ஒற்றுமையில்லை சுல்தானிய ஆட்சியிலும் நாயக்கர் ஆட்சியிலும் பாண்டியர் புகழ் மறைக்கபட்டது . காரணம் இதையெல்லாம் தெரிந்தால் மக்கள் புரட்சியில் இறங்கலாம் எனும் அச்சமும் இருந்தது . தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் களக்காடு, வள்ளியூர் என ஒதுங்கிய பாண்டியர்கள் குடும்பத்திலும் ஜடாவர்மனின் பெரும் வரலாறு பாரம்பரியமாக மின்னியதே தவிர வெளிகொண்டுவரபடவில்லை . எனினும் ஆலய கல்வெட்டும் செப்பேடுகளும் அவன் ஆண்ட மாபெரும் ராஜ்ஜியத்தின் பெருமையினை சொல்லிகொண்டிருக்கின்றன‌ . சித்திரை மூலம் (நாளை) அவனுக்கு குருபூஜை நாள் . நிச்சயம் ராஜராஜனின் சதயவிழா, ராஜேந்திரனின் ஆடி திருவாதிரை போல மிக மிக உற்சாகமாக கொண்டாடவேண்டிய நாள் அது . ஆனால் அதுபற்றி சிந்திப்பார் யாருமில்லை ஒரு காலம் வரும் அப்பொழுது திருவரங்க கோவில் முன்னால், சமயபுரம் கோட்டை முன்னால், மதுரை ஆலயம் முன்னால், நெல்லை பேராலயத்தின் உள்ளே எல்லா ம் அவனுக்கு சிலை நிறுபடும் . தாமிர பரணி முதல் துங்கபத்ரா தாண்டிவரை இப்பொழுதும் அவன் நினைவுகளை சுமந்து ஓடு நதிகரையெல்லாம் அவன் புகழ் மீட்டெடுக்கபடும் . அதுவரை சித்திரை மூலம் என்பது அவன் புகழை தாங்கி நிற்கும் ஒரு நாளாக பாண்டி நாட்டு மக்கள் மனதில் நிற்கட்டும் . தமிழக மன்னர்கள் புகழும் அடையாளமும் வெளிவந்து விட கூடாது என ஆப்கானிய சுல்தான்களும், நாயக்கர்களும், வெள்ளையனும் அச்சபட்டதில் அர்த்தம் உண்டு . அது தங்கள் ஆட்சிக்கான ஆபத்து என அஞ்சினார்கள் . ஆனால் இந்த சுதந்திர திருநாட்டிலும் தமிழக இந்துமாணவன் இதனையெல்லாம் படிக்காமல் கஜினி , கோரி, அக்பர், அசோகர், பாபர், திப்பு சுல்தான் என ஏன் படிக்க வேண்டும்? . யார் அப்படி படிக்கவைக்க உத்தரவிடுகின்றார்கள்? தமிழ்நாட்டிலே தமிழ் அரசர்களின் பெயர் மறைக்கபடுவது ஏன் என்பதுதான் தெரியவில்லை . தமிழக கல்வி வரலாற்று துறையின் மிக பெரிய அநீதி இது . இங்கு தமிழன் யார்? அவன் எப்படி இந்துவாய் இருந்தான்? அவன் வரலாறு என்ன? அவன் வாழ்ந்த பெருவாழ்வு என்ன? அவன் கண்ட அழியா ஆலயங்களும் பக்தியும் என்ன? என்பதையெல்லாம் தமிழக மன்னர்களின் வரலாறை மீட்டெடுக்கமால் சொல்ல முடியாது . அதில் ராஜராஜனும் ராஜேந்திரனும் வெளிவந்தார்கள், இன்னும் வெளிவரவேண்டிய மன்னர்கள் ஏராளம் உண்டு எனினும் ஜடாவர்மனின் வரலாறு மகா முக்கியமானது . ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் இருந்த சிவபக்தியில் கொஞ்சமும் குறைந்ததல்ல ஜடாவர்மனின் சிவபக்தி, அவனின் வாழ்வும் சிவதொண்டும் அதைத்தான் சொல்கின்றன‌ . அவன் போர்கள் செய்ததும் ராஜ்யம் நடத்தியதும் சிவாலயங்களை கட்டவும், திருமாலுக்கு அள்ளி கொடுக்கவுமே என்பது போல் அவனின் வாழ்வு இருந்தது, அவ்வளவு பெரும் பணிகளை செய்திருகின்றான் . . அவனின் குருபூஜை நாளில் பாண்டிய மக்களின் ஒருவனாகவும், மாபெரும் இந்து அரசனாக விளங்கிய அவனுக்கு ஒரு இந்தியனாகவும் வீரஅஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கின்றோம் . அக்காலத்தில் திருவரங்கம் , திருவாணைக்கா போன்ற ஆலயங்களில் சித்திரை மூலம் திருவிழா இவன் பெயரில் பிரமாதமாக நடக்கும் . "சேரனை வென்றான்" என்ற அடைமொழியோடு அது கொண்டாடபடும் மதுரை நெல்லையப்பர் சிதம்பரம் கோவிலில் வெகுவிஷேசமாக அவன் குருபூஜை நடந்திருந்தது, பின்னாளைய ஆட்சி குழப்பங்களில் அது வழக்கொழிந்தது . உரியகாலத்தில் அவை மீட்டெடுக்கபடும் வரை இப்படி நினைவுகளில் கண்ணீர் வழிய அந்த மாமன்னின் குருபூஜை நடக்கட்டும் . திருவரங்க வாசலில் அக்கோவிலுக்கு பொற்கூரை வேய்ந்த மன்னனுக்கு இல்லா மரியாதை ஈரோட்டு நாயக்கனுக்கு சிலையாக இருப்பதை ஒருகணம் எண்ணுங்கள் . விழியோரம் கண்ணீர் வந்தால் நீங்கள் இந்துக்களே, அந்த வலிதான் அந்த கண்ணீர்தான் சடையவர்மனுக்கு செலுத்தபடும் மாபெரும் அஞ்சலியாக இருக்க முடியும். - சிவார்ப்பணம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்