கருணாகரத் தொண்டைமான்
கருணாகரத் தொண்டைமான் என்ற கருணாகர பல்லவன் பல்லவ அரச குலத்தைச் சேர்ந்தவர். இவர் முதலாம் குலோத்துங்க சோழரின் முதலமைச்சர் மற்றும் சிறந்த படைத்தளபதி ஆவார். குலோத்துங்கர் இலங்கை மற்றும் கலிங்கத்தைக் கைப்பற்றியதில் கருணகரரின் பங்கு மகத்தானது. செயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன. முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் விக்ரம சோழருக்கும் அமைச்சராகப் பணிபுரிந்தார்.
கருணகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் முதலாம் குலோத்துங்கரின் நன்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் அழகிய மணவாளினி மங்கையாழ்வார்.
இலங்கை போர்
சோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, சிங்கள அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார். அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் இவர் நினைவாகக் கட்டப்பட்டது. இலங்கையில் உள்ள தொண்டைமானாற்றுக்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.
கலிங்கப் போர்
கலிங்கத்தை ஆண்டு வந்த அனந்தவர்மன் சோடகங்கன் என்ற சாளுக்கிய அரசர் முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது. .
கலிங்கத்துப்பரணி
கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற பரணியே கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.
கலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
யிருபணை வேழ முந்தவே!
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே
வண்டை வளம்பதி பாடிரே
மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
பல்லவர் தோன்றலைப் பாடிரே

கலிங்கத்துப்பரணியிலிருந்து
அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
யிருபணை வேழ முந்தவே!
கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே
வண்டை வளம்பதி பாடிரே
மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
பல்லவர் தோன்றலைப் பாடிரே
Comments
Post a Comment