மரணமில்லா மரபினரின் பட்டங்கள்
மரணமில்லா மரபினரின் பட்டங்கள்
பட்டப்பெயர் சுமையாக தெரிந்தல் சுமந்து பாருங்கள் அதன் வலிமையும் செயல் திறனும் உங்களை வளமிகு உச்சத்திற்கு சுமை இன்றி உயர்த்திவிடும்.
எம்முன்ணோர்கள் உழைப்பில் கரையாமல், களங்காமல், கலையாமல் அணிந்த மேலாடையே நம் குல பட்டங்கள். அலங்காரபிரியன் முதல் வைகைராயன் வரை ஈராயிரம் பிரளாயமே வியக்கும் பட்டங்கள். வில்லவன், வள்ளவன், ஈகைகொண்டான், நாடாள்வான் என நீளும் மரணமில்லா மரபினரின் பட்டங்கள்.
குருதி சிந்திய குலத்துக்கு பட்டங்கள்
மரித்தும் மரணமில்லா மறவர்களுக்கு பட்டங்கள்
மடிந்தும் மார்பினில் வேல் தாங்கிய மறவர்களுக்கு பட்டங்கள்
மண்கொண்ட மன்னர்களுக்கு பட்டங்கள்
மாராயம் கொண்ட கள்ளர்களுகோ பட்டமோ பட்டங்கள் பல்லாயிரம் பட்டங்கள்.
கள்ளர்குலம் அணிந்திருக்கும் மென்மையான மேல்மையான ஆடையே நம்குல பட்டங்கள்.கள்ளர் குலம் உலகந்தோன்றிய காலத்தே சூரியமரபில் தோன்றி இற்றைக்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் ஏகாதிபதியாய் பல்லாயிரம் நகரங்களையும், எண்ணிறந்த கோயில்களையும் அளவற்ற ஆறுகளையும் கணக்கற்ற ஊர்களையும் உண்டுபண்ணி வாழையடி வாழை போல் ஆண்டு வந்த ஒரு பூர்வீக குடிகளென்பது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெங்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கலிங்கத்துப்பரணி, பன்னிருதிருமுறை, திருமொழிப்பிரபந்தம் மூலம் அறிய முடிகிறது. ஈராயிரம் பட்டங்களை சுமந்து பல்லாயிரம் பிறைகளை கண்ட மரபினர் கள்ளர். இப் பட்டங்கள் அரசன்,தலைவன்,வீரம், நாடு, நகரம், ஆறு, ஊர், கோயில், குளம், ஏரி முதலியவற்றுடன் சம்பந்தபட்டவை என்பதனை நன்குணரலாம்------International kallar peravai
Comments
Post a Comment