திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடி கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள "செவிட்டு முனீஸ்வரன் கோயில்".













திருச்சி மாவட்டம் பழங்கனாங்குடி கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள "செவிட்டு முனீஸ்வரன் கோயில்".இங்கு மரங்களில் வெண்கல மணிகள் கட்டப்பட்டிருக்கும்.மணிகள் பக்தர்களால் காணிக்கையாக வேண்டுதல் நிறைவேறியதும் கட்டப்பட்டவையாகும்.மணியடித்தால் தான் முனீஸ்வரன் நம் வேண்டுதலைக்கேட்பார் என்பது ஐதீகம்.இதன் அருகில் 30 வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய ஆல மரம் இருந்தது.அது வீழ்ந்து விட்டது.அக்காலத்தில் திருவெறும்பூரிலிருந்து நடந்து ஒத்தையடிப்பாதையில் வருபவர்களுக்கு ஊர் வந்து சேர்வதற்கு இந்த ஆலமரம் தான் அடையாளமாக இருந்தது.இதன் அருகில் உள்ள குளத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும்.அக்காலத்தில் இக்குளத்து நீர் குடிநீராகப்பயன் பட்டது.ஊரில் வேறொரு பெரிய குளம் உள்ளது.அதில் காவிரியாற்றின் நீர் மாத்தூர் வழியாக கால்வாய் மூலம் வந்து சேர்கிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்