திருவண்ணாமலை கோயில் அமைப்பு








திருவண்ணாமலை கோயில் அமைப்பு
அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.
திருமஞ்சன கோபுரம்
திருவண்ணாமலையின் தெற்கு திசையில் உள்ள கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 157 அடி உயரம் உடையதாகவும். இக்கோபுரத்தின் வழியாகவே உற்சர்வர்கள், மூலவர்கள் சந்நிதிக்கு அபிசேகத்திற்கென திருமஞ்சன நீர் எடுத்து வருவதால் இக்கோபுரம், திருமஞ்சன கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
அம்மணியம்மாள் கோபுரம்
திருவண்ணாமலையின் வடக்கு திசையில் உள்ள கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் 171 அடி உடையதாகும். இக்கோபுரம் கட்டி முடிக்கப் படாமல் இருந்த பொழுது அம்மணியம்மாள் எனும் பெண் சித்தர், பக்தர்களின் உதவியோடு பொருளீட்டி இக்கோபுரத்தினை கட்டினார். அதனால் அவ்வம்மையின் நினைவாக அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.
பேய் கோபுரம்
திருவண்ணாமலையின் மேற்கு திசையில் உள்ள கோபுரம் பேய் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரம் 160 அடி உடையதாகும். இக்கோபுரம் பே கோபுரம் என்றும் சுட்டப்படுகிறது.
ராஜ கோபுரம்
அண்ணாமலையார் கோயில் கிழக்கு கோபுரம்
திருவண்ணாமலையின் கிழக்கு கோபுரம் இராஜ கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இராஜ கோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும். இதனால் தமிழகத்தின் இரண்டாவது உயர்ந்த கோபுரம் என்ற பெருமை பெற்றுள்ளது. இக்கோபுரம் 11 நிலைகளைக் கொண்டதாகும். இதன் அடிப்பகுதி 135 அடி நீளமும், 98 அடி அகலமும் உடையதாக இருக்கிறது.
கிளி கோபுரம்
மூன்றாவது பிரகாரத்தில் கிளி கோபுரம் அமைந்துள்ளது. இது 81 அடி உயரமுடையதாகவும். அருணகிரி நாதர், கிளியாக உருவெடுத்து தேவலோகத்திலிருந்து பாரிஜாத மலர்களை கொண்டு வர சென்ற போது, அவருடைய உடலை எரித்துவிட்டார்கள். அதனால் கிளியாக அமர்ந்து இக்கோபுரத்தில் பாடல் பாடினார். அதனால் இக்கோபுரம் கிளி கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோபுரத்தின் சிற்பங்கள் இடையே கிளியொன்று அமர்ந்திருப்பது போன்ற சிற்பத்தினைக் காண முடியும்.
வல்லாள மகாராஜா கோபுரம்
ஐந்தாவது பிரகாரத்தில் வல்லாள மகாராஜாவால் கட்டப்பெற்ற கோபுரம் அமைந்துள்ளது. இது அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. இதனைக் கட்டிய பெருமையால் ஆனவம் கொண்டிருந்ததால், சிவபெருமான் இக்கோவில் கோபுரம் வழியாக உள்ளே நுழைய மறுத்ததாகவும், அதனால் மனம் வருந்திய மன்னன் தன் தவறினை உணர்ந்த பிறகு, சிவபெருமான் இக்கோபுரம் வழியாக வந்ததாகவும் தொன்மொன்று உரைக்கிறது.
இவையன்றி தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
இதனால் திருவிழாவின் பத்தாம் நாளில் இக்கோபுரம் வழியாக உற்வசவர் உள்நுழைகிறார்.
மண்டபங்கள்
ஆயிரம் கால் மண்டபம்
தீப தரிசன மண்டபம்
16 கால் மண்டபம்
திருக்கல்யாண மண்டபம்
புரவி மண்டபம்
மணி மண்டபம்
கொலு மண்டபம்
மஹாசங்கராந்தி மண்டபம்
அமுத மண்டபம்
அவணி ஆளப்பிறந்தான் மண்டபம்
ஏழாம் திருநாள் மண்டபம்
சக்திவிலாச சபா மண்டபம் - திருக்கோயிலில் பிரம்ம தீர்த்தக் குளத்திற்கு எதிரில் தவத்திரு ஞானியர் சுவாமிகள் நிறுவிய சக்திவிலாச சபா மண்டபம் உள்ளது. இங்கு சமய சம்மந்தமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்