மேலூர் 18பட்டி பெரிய அம்பலகாரர் வை.பு.வையாபுரி


மேலூர் 18பட்டி பெரிய அம்பலகார ர் மற்றும் மேலூர் கிராம முன்சீப் ஆக பதவி வகித்தவர் குற்றப்பரம்பரைச் சட்டம் மேலூர் பகுதி கள்ளர்கள் மீது திணிக்கக்கூடாது என வழக்கறிஞர் நாவினிப்பட்டி நல்லமணி அம்பலம் அவர்களுடன் இணைந்து வெள்ளைய அதிகாரிகளிடம் வாதிட்டு கொடுஞ்சட்டத்திலிருந்து மக்களை காத்தார் .முல்லைப்பெரியாறு அணைக்காக பென்னிகுக் அவர்களிடம் அன்றைய காலகட்டத்தில் 3லட்சரூபாய் நிதிவசூலித்து கொடுத்து மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தினார் .தனது சொந்த கட்டிடத்தை அரசாங்க அலுவலகம் செயல்பட தானமாக வழங்கினார் அது இன்றும் மேலூர் பேருந்து நிலையம் எதிரே கிராம நிர்வாக அதிகாரி அலுவலகமாக செயல்பட்டு இந்த மாமனிதனின் நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கின்றது.
பெரியாறு அணைத்திட்டத்திற்கு பெரும் நிதிதிரட்டி அளித்ததற்காகவும் ,அத்திட்டம் மேலூர் பகுதியில் முறையாக அமுல்படுத்தப்படுவதற்கு எல்லாவிதமான நடைமுறை ஒத்துழைப்பும் வழங்கியதையும் பாராட்டி அன்றைய வெள்ளைய அரசு அவருக்கு ராவ் பகதூர் பட்டமளித்து பாராட்டியது.........நன்றி......... கலைமணி அம்பலம்......... மேலூர்

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்