சிவபுரம்


ஸ்ரீ ஆதிசங்கரர் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால் அவரது மூதாதையர் யார் தெரியுமா? அவர்கள் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சிவபுரத்தை சேர்ந்தவர்கள். சிவபுரத்திலிருந்து கேரளாவிற்குச் சென்று குடியேறியவர்கள் சிவனின் பெயராலேயே புரம் என்று அழக்கப்படும் இவ்வூர் குபேரபுரம், பூ கைலாயம். சண்பகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதடசணம் செய்து வழிபட்ட தலம். பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகியோர் தரிசித்து பேரு பெற்றுள்ளத் தலம்.
மேலும் பல்வேறு சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலம் குழந்தைப்பேறும் வழக்குகளில் வெற்றியும் தரும் ஸ்தலமாகும்.
புராணச் சிறப்பு
இரண்யாஷன் என்ற அசுரன் இந்த உலகத்தை அழிக்க முயன்றான். அப்போது ஜகத்ரட்சகனான திருமால் வெண்பன்றி உருவெடுத்து தன் கொம்பின் முனையில் உலகத்தை தூக்கி நிறுத்திக் காப்பற்றினார். பின் இத்தலம் வந்து சிவபுரநாதரை வழிபட்டு அருள் பெற்றார்.
திருமால் வராகமூர்த்தியாக அவதாரமெடுத்த போது அவர் மேனியில் பட்ட மண் துகள்களை ஒன்று திரட்டி இத்தலத்தில் சிவலிங்கமாக்கி வழிப்பட்டாள் திருமகள்.
குபேரனாக்கிய சிவபுரம்
ஒரு சமயம் செருக்கோடு கைலாயம் வந்த இராவணனைத் தடுத்தார் நந்திதேவர் குபேரன் இரவணனுக்கு பரிந்துபேச, நந்தி தேவரின் சாபத்திற்க்கு ஆளானான் குபேரன். ஆகவே இத்தலத்தின் தனபதி என்னும் பெயருடன் பேராசைக்காரனாகப் பிறந்து இறைவனை வழிப்பட்டு வந்தான். ஒருநாள் வடக்கு பிரகாரத்தில் ஒரு செப்புபட்டயம் கிடந்தது. அதில் மாசி மாதம் மகாசிவராத்திரி சோமவார பிரதோஷத்தில் வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை இருபுரமும் தாய் தந்தையார் பிடித்து நிற்க வாள் கொண்டு அறுத்து வெளிவரும் இரத்தத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் பெரும் பொருள் கிடைக்கும் என்று வடமொழி சுலோகத்தால் எழுதப்பட்டிருந்தது.
அதன் படியே வறுமையில் வாடிய ஒரு அந்தண தம்பதியர் பொருளுக்காக இதற்கு சம்மதிக்க தனபதி வள் கொண்டு அறிந்தான். அப்போது குழந்தை அன்னை சிங்காரவல்லியை நினைத்து வேண்ட அம்பிகை இறைவனிடம் வேண்டினாள். தனபதியின் சாபம் போக்கிவிடவே இவ்வாறு செய்தோம் என அருளிய எம்பெருமான் தனகபதியை குபேரனாக்கினார். தம்பதிய்ராக இந்திரன், இந்திராணி, அக்கினிதேவன் ஆகிய மூவரும் சிவலிங்கத்தைத் தங்கி நிற்பதாகக் கூறுவர். பெருமானின் திருமுடியில் இரத்தத்துளி இருப்பதை இன்றும் காணலாம்.
இத்தலத்தில் பூமிக்கடியில் ஒரு அடிக்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம் இதனாலேயே ஞானசம்மந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்தே சிவபெருமானை தரிசித்து பின் ஊர் எல்லைக்கு அப்பால் இருந்த படியே பாடியதாக வரலாறு அவ்வாறு அவர்கள் பாடிய இடம் இன்று சுவாமிகள் துறையென அழைக்கப்படுகிறது.
ஆலமர விநாயகர்
சிவபுரமருகில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அதில் அடிப்பகுதியில் குகை போன்ற அமைப்பு உள்ளது. அதனுள் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். ஆலமரத்தினுள் நுழைந்து சென்று விநாயகரை தரிசிப்பது வேறு எங்கும் இல்லாத அதிசய்மாகும்.
பட்டினத்தார்
பட்டினத்தாரின் தமக்கையார் வீடு சிவபுரத்தில் உள்ளது. அக்காலத்தில் பட்டினத்தார் படிக்கொணடே இவ்வூருக்கு வர அதை இழிவாக எண்ணிய தமக்கையார் அப்பம் செய்து அதில் விஷத்தைக் கலந்து பட்டினத்தாருக்கு அன்போடு கொடுப்பது போல் கொடுக்க ஞான திருஷ்டியால் கபடம் அரிந்த பட்டினத்தார் அப்பத்தை தமக்கையாரின் ஓட்டின் மேல் எறிந்து பற்றி எரிகவே என்று பாட வீடு தீப்பிடிந்தது. அந்த வீடு தற்போதும் சிவபுரத்தில் உள்ளது.
பரிகாரப் பலன்
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்தல அம்பிகைக்கு அபிஷேக ஆராதனை
செய்து விருதமிருந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை புரிய குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர். குழந்தைகளுக்கு எற்படக்குடிய தோஷங்கள் உடல் உபாதைகள் இத்தல அம்பிகையை வழிபட நீங்கும். தீராத வழக்குகள் ஏமாற்றப்படுதல் தகராறு போன்றவை விழகி வெற்றி கிடைத்து நிம்மதியுடன் வாழ விழைவோர் இத்தலக்கோவிலில் உள்ள பைரவருக்கு கலை சந்திகாலத்திலோ (8.30மணி) அல்லது இரவு அர்த்த சாமத்திலோ (மணி7.30வடி8.30வரை) அபிஷேகம் செய்து வடமாலை சார்த்தி தயிர்சாதம் கடலை உருண்டை நிவேத்யம் செய்து சிவகுருநாதரை அங்கப்பிரதட்சணம் செய்ய நினைத்த காரியம் வெற்றிபெறும்.
ஆதி சங்கரருடைய பிதாவாக சிவகுரு தலம் செய்த திருச்சூரை நம்பூதிரிகள் சிவபுரம் என்று அழைக்கிறார்கள். சிவபுரம் என்ற பெயரே திருச்சிவ பேரூர் என்றாகி திருச்சூர் என்று மருவி வந்திருக்கிறது. ஒரு நட்டவர் மற்றைய நாட்டுக்கு குடிபெயரும் போது பழைய நாட்டிலுள்ள பெயர்களையே புது நாட்டில் ஏற்படும் ஊர்களுக்கு வைப்பதைப் பார்த்திருக்கிறோம். மலையாளத்திலுள்ள சிவாலயங்களில் மிகவும் முக்கியமூம் பெரிதும் ஊருக்கு நடுநாயமாகவும் விளங்குவது திருச்சூர் என்னும் சிவபுரத்தின் ஆல்யம்.
கும்பகோணம் மகாக்ஷேத்திரம்
( ஸ்ரீ காட்சி காமகோடி மடத்திலிருந்து அருளிச் செய்யப்பட்டது)

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்