புகார் நகரின் கடைசி சோழன் நெடுமுடிக்கிள்ளி சோழன்

#புகார் நகரின் கடைசி சோழன்  நெடுமுடிக்கிள்ளி சோழன்  🐅:

    நெடுமுடிக்கிள்ளி சோழனின் தந்தையின் சகோதரி நற்சோணை சேர நாட்டில் மணமுடிக்கப்பட்டு சேர அரசியானவர்.அவரின் மகன்  சேர அரசனான  செங்குட்டுவன் . அதனால் இவ்வரசன்   செங்குட்டுவனிற்கு 'மைத்துனச் சோழன்’ என்றழைக்கப்பட்டார் .   நெடுங்கிள்ளியின் தந்தையான சோழ மன்னன் இறந்தவுடன் பங்காளிகள் ஒன்பதின்மர் இவருடன் போரிட்டனர். நெடுங்கிள்ளிக்கு ஆதரவாக  செங்குட்டுவன் கலகம் செய்த பங்காளிகள் அனைவரையும் #நேரிவாயில் என்ற இடத்தில் வென்று, நெடுமுடிக்கிள்ளியை அரசனாக்கினார் . சோழ நாட்டின் தொண்டை மண்டலத்தை பாண்டிய அரசனும் , மற்றொரு சேர அரசனும் தாக்கினர். நெடுங்கிள்ளியின் தம்பி #இளங்கிள்ளி  இருவரையும் தோற்கடித்து தொண்டை மண்டல பகுதிகளுக்கு அதிபதியாகி காஞ்சியை தலை நகராகக் கொண்டு அரசாண்டார்.

  நெடுங்கிள்ளி அரசருக்கு வெண்வேற் கிள்ளி, மாலண் கிள்ளி, வடிவேற்கிள்ளி, கழற்கிள்ளி, கிள்ளி என்று பல பெயர்களில் குறிக்கப்பட்டார்.

     பாணர் மரபில் வந்த சீர்த்தி என்ற  இளவரசியை மணந்து சோழ நாட்டு அரசியாக்கினார் . இவர்களுக்கு பிறந்த மகன் உதயகுமாரன் . உதயகுமாரன் மாதவியின் மகள் மணிமேகலையின் மீது காதல் கொண்டு , சிறு தவறால் வெட்டிக் கொல்லப்படுகிறான் என்று மணிமேகலை கூறுகின்றது. சீர்த்தியை மணக்கும்  முன்னர் நெடுங்கிள்ளி நாகர் நாட்டு இளவரசி #பீலிவளை மீது காதல்  கொண்டு மணந்தார் . பீலிவளையின் மூலம் பிறந்த குழந்தையை சோழ நாட்டு அரசனாக்குவேன் என்று வாக்குரைத்து விட்டு சோழ நாட்டைச் சேர்ந்தார் . நாக நாட்டிலிருந்து வெற்றிலைக் கொடியை புகார் நகரிற்கு கொண்டு வந்தார் . நாக நாட்டிலிருந்து புகாரை நோக்கி வந்த பீலிவளையின் மகன் கடலில்  இறந்ததாய் மணிமேகலை கூறுகின்றது . மணிமேகலை கூற்றின்படி உதயகுமாரனும் , பிலிவளையின் மைந்தனும் இறந்து சோழன் சாம்ராஜ்யம் முடிவுற்றதாக கூறுகிறது.  மைந்தர்கள் அழிவுற்ற துக்கத்தினால் அரசர் இந்திரவிழாவை நடத்தாது இருந்தார். பெரும் #கடற்கோள் (சுனாமி) வந்து  புகார் நகரையும் , மணி பல்லவ தீவினையும் , நாக நாட்டையும் அழித்தது . முற்றிலும் அழிந்து போன புகாரை நகரை விட்டு , #சோழ சாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிக்கும் பொருட்டு அரசன் மட்டும் செங்கோலுடன் தனி ஒருவனாய் வெளியேறினான்.

சோழர்களின் தேடல் தொடரும்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்