காவிரி நதி நீர்
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங்களுக்கு இடையே எழுகின்ற நீர்த்தகராறுகளைத் தீர்த்து வைப்பதற்கென இந்தியப்பாராளு மன்றத்தில் 1956 ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.1997 ல் இந்திய அரசு காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது.கர்நாடக அரசு அதை எதிர்க்கவே காவிரி ஆணையத்துடன் காவிரிக் கண்காணிப்புக் குழு வையும் அமைத்தது.புள்ளி விவரங்கள் சேகரித்து ஆணையத்துக்கு வழங்கி ஆணையம் இடும் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குழுவின் வேலையாகும்.காவிரி நதி நீர் தகராறு நடுவர் மன்றம் 1990 ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.நடுவர் மன்றம் தன் இறுதித்தீர்ப்பை 2007 பிப்ரவரி மாதம் வெளியிட்டது
தமிழ் நாடு கேட்டிருந்த 566 டி எம் சி தண்ணீருக்குப்பதிலாக 419 டி எம் சி தண்னீர் விடச்சொல்லி தீர்ப்பு.அதையே ஒழுங்காக கர் நாடக அரசு தரவில்லை.தஞ்சாவூர் டெல்டா வாழ் மக்களின் வளமும், நலமும் காவிரி நீர் வரவைப்பொறுத்தாகும்.கர்நாடக அரசு தடுத்தால் போராடியே தீர வேண்டும்.அதே போன்று மீதேன் திட்டத்தை தடுக்காவிடில் விளை நிலம் பாதிக்கும்.இந்த இரண்டு விஷயங்களை மனதிற்கொண்டே தமிழக மக்கள் இனி ஓட்டளிப்பார்கள் என நம்புவோம். இவற்றை ஆதரிக்காத கட்சிகள் தமிழகத்தில் இருந்து பிரயோஜனம் இல்லை.
Comments
Post a Comment