வாணர் குல அரசர்கள்

வாணர் குல அரசர்கள்.
தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் வரிசையில் போர்க்குடியாகவும்,புகழ் பெற்ற மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் அழைக்கப்படும் மகாபலியின் வம்ச குடியினரே ஆவார்கள். வாணர் என்றால் மலையர் என்ற மலையாளும் மன்னர் குடியாக கொள்ளப்படுகின்றது..

சேரனை சங்க இலக்கியத்தில் மலையன் என்றும் வானவன்(மலையர்) என்றும்.வானவரம்பன்(சேரன்) மலைகளை எல்லையாக கொண்டவன் என்று கூறுகின்றது.ஆக தென்னாடு முழுவதும் விந்திய மலை முதல் தென் மலையான பொதிகை,மேற்கு தொடர்ச்சி மலை பகுதி வரை மகாபலி வம்சத்தவர்களான வாணர்(மலையர்) என்ற மன்னர்களே ஆண்டுள்ளனர். இதற்கு ஆதாரமாக.

"தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக் கெழு வெண்ணாய் விழுநிதி" (அடி 202 - 204 மதுரைகாஞ்சி) - எனக் குறிப்பிடுகிறது. இவ்வரிகளில் குறிக்கும் தென்புலம் என்பது இந்தியத் திருநாட்டிற்கு தென்புறம் தடுப்புச்சுவர் போல் உள்ள விந்திய மலையாகும். இது தக்காணம், தஷ¤ணபாதம், தக்கண பாதம் எனவும் வட மொழியில் அழைக்கப்படுகின்றன.இதில் இருந்து விந்திய மலையிலிருந்து குமரிவரை தமிழ் மன்னாக இருந்திருக்க வேண்டும்.இந்த தினைகளில் முதல் தினையான குறிஞ்சி(மலை) தினை ஆளும் சக்கரவர்த்தியாக மஹாபலியே திகழ்ந்திருக்கவேண்டும்...நன்றி...International kallar. Pervasive...

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்