"A.P.J. அப்துல்காலம் அவர்கள் பசும்பொன் தேவரை பற்றி

"A.P.J. அப்துல்காலம் அவர்கள் பசும்பொன் தேவரை பற்றி பொக்கிஷம் என்ற புத்தகத்தில் கூறியவை"

நேதாஜியுடன் இணைந்து வீர முழக்கமிட்டு மக்களை ஒற்றுமை படுத்தி இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஒர் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் திரு. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.

அப் பெருமகனாரின் நூற்றாண்டு விழாவில் அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் வாழ்ந்த வாழ்வு பெரு வாழ்வு. தமிழகம் சிறப்பாக வளர்ந்த மாநிலமாக மாறவேண்டும். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்று வேலை வாய்ப்பு பெற்று அனைவரது வாழ்க்கைத்தரமும் மேம்பாடு அடைந்து வேறுபாடற்ற ஒரு நல்ல சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்பது அவரது கனவு.

அவரது கனவை நனவாக்கும் முயற்சியின் ஒர் வெளிப்பாடாக பொக்கிஷம் என்ற வரலாற்று புத்தகம் அமையும் என்று நம்புகிறேன்.

எனது வாழ்த்துக்கள்
-A.P.Jஅப்துல்காலம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்