திருத்தணி - வேலஞ்சேரி
திருத்தணி - வேலஞ்சேரி செப்பேடுகளின் சுருக்கம்.
பராந்தகசோழனினின் 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இச்செப்பேடு ஆங்கில ஆண்டு கி.பி. 932 ஆகும்.
விஷ்ணு,பிரம்மா, மரிச்சி,காஸ்யபா, சூரியா,உஷினாரா போன்றோர் இவன் குலத்தில் தோன்றினார்கள் என்றும், கர்காலன்,சிபி, கோச்செங்கணான் போன்ற சோழ முன்னோர்களின் செய்திகளும் காணப்படுகின்றன. இச்செப்புப்பட்டயத்தின் சமஸ்கிருதப் பகுதி சோழ மன்னர்களின் பட்டியலையும் தருகிறது. அதில் கோச்செங்கணான் என்று ஒருவன் குறிப்பிடப்படுகிறான், அவன் மகன் ஒன்றியூரான் என்றும், அவன் மகன் சிறந்த போர் வீரன் என்றும், அவன் மகன் ஆதித்யன் என்றும் கூறுகிறது. இதிலிருந்து ஆதித்யன் தந்தையான விஜயாலயனுக்கு ஒன்றியூரான் தந்தை என்றும், ஒன்றியூரானின் தந்தையான கோச்செங்கணான் என்பவன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளான் என்றும் அறிய முடிகிறது. இலக்கியங்களில் காணப்படும் பெருஞ்சேரல் இரும்போறையோடு போரிட்டு வெற்றி கண்ட கோச்செங்கணான் இவனா என்பது ஆய்வுக்குரியதாகும். மேலும் கரிகாலன் காலத்திய மூன்று நிகழ்ச்சிகள் பற்றி இச்செப்பேடு கூறுகிறது.
1. கரிகாலன் சோழர்களின் புகழை இமயம் வரை பரப்பினான்
2. காவேரியாற்றின் இரு கரைகளிலும் அணைகள் கட்டி வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தினான்.
3. காஞ்சியில் பல அரண்மனைகள் கட்டினான்.
விஜயாலயனின் தந்தை பெயர் ஒற்றியூரான் என்றும் ஆதித்த சோழனின் மகனாகிய முதலாம் பராந்தகன் இராமேஸ்வரம், திருவரங்கம், கன்னியாகுமரி கோயில்களுக்கு துலாபாரம் அளித்துள்ளான் என்ற புதிய செய்தியையும் முதலாம் பராந்தகசோழனின் வேலஞ்சேரி செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
Photo:Thiruthani
Comments
Post a Comment