சிவந்தெழுந்த பல்லவரையர்

தொண்டை மண்டலத்தில் ஆட்சி செய்த கள்ளர் குலத்தின்  ஒரு பிரிவினரான தொண்டைமான் மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் இருந்து சோழநாட்டிற்கு இடம் பெயர்தல்:
============================================================================================

சிவந்தெழுந்த பல்லவரையர்
***************************************

பாண்டிய மன்னன் உக்கிர வீர பாண்டியனால் ஏழு வருடம் காத்திருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வரப்பட்ட வெங்கடாசல பல்லவராயர் தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறினார். அவரோடு தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவரும், தொண்டை மண்டலத்தில் இருந்து இடம்பெயர்ந்து அம்புநாட்டில் குடியேறினார். அங்கிருந்து இடம்பெயர்ந்த பல்லவராயரின் ஒரு குழுவினர் வைத்தூரில் குடியமர்ந்தனர். பல்லவராயன், காடவராயன், காடுவெட்டி ஆகிய கள்ளர் குழுக்கள் இன்றும் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வாழ்கின்றனர். (Manual of pudukkottai state 1920, P 732)( சிவந்தெழுந்த பல்லவராயன் உலா) ( புதுக்கோட்டை சமஸ்தான செப்பேடு/ General history of pudukkottai state 1916 p 98)

அறந்தாங்கி தொண்டைமான்
****************************************
அறந்தாங்கி தொண்டைமான் பெயர் பொறித்த 50 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி தொண்டைமான்களைப்பற்றி கி.பி.1426ல் தான் முதலில் தெரிகிறது. பொன்னம்பல நாத தொண்டைமான் (கி.பி.1514—1567) மிகவும் வலியும். செல்வாக்கும் முள்ளவனென்று தெரிகிறது. இவன் இலங்கையை ஏழுநாளில் வென்றதாகச் சொல்லப்படுகிறது. வாளரமாணிக்கம் என்று அழைக்கப்படும் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ #பெரியநாயகி அம்பாள் சமோத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கானப்படும் பல்வேறு கல்வெட்டுகள் 15 ஆம் நூற்றாண்டுகளில் அறந்தாங்கி மன்னர்களான ஏகாம்பர தொண்டைமான் மற்றும் பொன்னம்பல தொண்டைமான் போன்றோரும் தேவதானம் வழங்கிய தகவல்கள் கிடைக்கின்றன. அறந்தாங்கி தொண்டைமான்களின் வழிவந்தவர்களே, இன்றைய கள்ளர் குல பாலையவனம் ஜமீன்தார்கள் ( A general history of pudukkottai state 1916, புதுக்கோட்டை சமஸ்தான வெளியீடு)P,85 . விஜயநகர சங்கம வம்சத்தின் கீழ் (1336-1485 ஏ.டி) கல்வெட்டுகள் வனாதரையர், கங்கைராயர் மற்றும் அறந்தாங்கி தொண்டைமான் போன்ற பல உள்ளூர் தலைவர்களைக் குறிக்கின்றன.

புதுக்கோட்டை தொண்டைமான்
********************************************

தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே விளங்கியிருந்தமை மேல் எடுத்தக் காட்டப்பட்டது. அம்புகோவிலில் தங்கி ஆண்டுகொண்டிருந்த தொண்டைமான் வழியினர் 17-ஆம் நூற்றாண்டிருந்த புதுக்கோட்டை அரசராயினர்.

இவர்கள் ஆட்சிபுரியலான நாடுகள் இவையென்பதனை.

‘ஆலங்குடிநாடமரா பதிநாடு கோலங்கடுவன் குடிநாடு - மேலான செங்காட்டுநாடு திருப்பேரையூர்நாடு மங்காதவல்ல வளநாடு - கொங்காரும் மெய்யமலை நாடு மேவுசந்த்ரரேகை நாடையன் கொடுங்குன்ன றணீநாடு - செய்ய சீருக் கோளக் குடிகாடு கோனாடெனப் புரந்தே ஆளப் பிறந்தவரசர்கோன்"

என்பது விளக்கும்.

புதுக்கோட்டை தொண்டைமான்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை அம்புக்கோயில் பகுதியில் பல்லவராயருடன் குடியேறியதாக புதுக்கோட்டை வரலாற்று குறிப்பு கூறுகிறது. தெலுங்கில் காணப்படும் "தொண்டைமான் வம்சாவளி" எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர (கரிகாலன் சோழன்) வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடு, இதில் பச்சை தொண்டமானின் வாரிசான ஆவடை ரகுநாத ராய தொண்டைமானின் முன்னோர்களாக 15 பேரின் பெயர்கள் தொண்டைமான் வம்சாவளி எனும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.( General history of pudukkottai state 1916 P 114). இவர்கள் திருமலை தொண்டைமான் என்பவரின் மரபு வழியில் வந்தவர்கள். திருமலை தொண்டாமான் தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலத்தில் இருந்த திருப்பதியில் இருந்து புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள்.

புதுக்கோட்டை அம்புக்கோயிலில் கிடைத்த கிபி 1110 ம் ஆண்டை சேர்ந்த வல்லாள பாண்டிய தேவரின் கல்வெட்டில்(IPS 458) முதன்முதலாக புதுக்கோட்டை தொண்டைமான்களின் முன்னோர் குறிக்கப்படுகின்றார். ஆனை தொண்டைமானார் என்பவர் அம்பு கோயிலில் வசித்ததையும், அவர் கோயிலுக்கு அளித்த கொடையையும் இக்கல்வெட்டின் மூலம் அறிகிறோம். இவருடன் குளந்தையராயர் என்பவரும் குறிக்கப்படுகிறார். இன்றும் அம்பு நாட்டில் குளந்தைராயர் எனும் பட்டம் கொண்ட கள்ளர் குழுவினர் வாழ்கின்றனர்.

ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 43 கி.மீ. தொலைவில் உள்ளது. சங்க இலக்கியமான அகநானுறில் இவ்வூர் அலும்பில் எனக் குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுச் சான்றுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. அலும்பில் என்பதே இன்று அம்புக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் சக்கரவர்த்தி இங்கு குடியிருந்ததாக 1210 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கூறுகிறது

புதுக்கோட்டை , வீரபாண்டிய தேவர் கால ( கிபி 13 ஆம் நூற்றாண்டு பிற்பகுதி) கல்வெட்டு எண் (369) அம்புக்கோயிலில் வாழ்ந்த பல்லவராயன் ஒருவனை பற்றி குறிப்பிடுகிறது. தொண்டைமான்களும், பல்லவராயர்களும் அம்புக்கோயிலில் உள்ள தெற்கு கரையில் சில கள்ளர் குடிகளுடன் வாழ்ந்ததாக Manual of pudukkottai state குறிப்பிடுகிறது.

புதுக்கோட்டை கல்வெட்டு எண் 522, முதலாம் சுந்தரபாண்டியர் (கிபி 1230) காலத்தை சேர்ந்ததாகும். இந்த கல்வெட்டில் "அன்பில் அஞ்சுகுடி அரையர்கள்" என அம்புநாட்டின் கள்ளர் அரையர்கள் குறிக்கப்படுகின்றனர். பாண்டியரின் மேலான்மையை ஏற்று அம்புநாட்டின் அரையர்களாக இருந்துள்ளனர்.

தொண்டைமான்கள் அம்புநாட்டில் குடியேறியபின் (மேலக்காரர், கண்டியர், பிச்சர், குருக்கள், அம்பட்டர்) ஆகிய அஞ்சு குடிகளை அங்கு குடியமர்த்தி அந்த ஊரின் அரையர்களாக இருந்துள்ளனர். (General history of Pudukkottai State 1916)

கிபி 11 ஆம் நூற்றாண்டில் அம்புகோயில் கல்வெட்டில் குறிக்கப்பட்ட தொண்டைமான்கள் கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் அம்புகோயிலின் அரையர்களாக குறிக்கப்படுகின்றனர்.

ராய ரகுநாத ராய வஜ்ரிடு ராய மண்ணித ராய ஆவடை ரகுநாத தொண்டைமான் :

புதுக்கோட்டையின் முதல் மன்னரான இரகுநாத தொண்டைமானின் தந்தையே ஆவடை ரகுநாத ராய தொண்டைமான் ஆவார். அவரை பற்றிய வரலாற்று குறிப்பு " தொண்டைமான் அணுராகமாலை எனும் வரலாற்றுக் காவியத்தில் உள்ளது.

"இந்நிலமன் சீரங்க ராயருக்கு ராயத்தொண்டை மன்னன் பிடித்தனுப்பும் மால் யானை" என குறிக்கப்படுகிறார். அதாவது அம்புநாட்டில் அரையர்களாக இருந்த தொண்டைமான்கள் " மன்னர்களுக்கு யானை படைக்கு பயிற்சி அளித்து போருக்கு அனுப்புவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர்.

அம்புகோயிலில் அரையர் நிலையில் இருந்த தொண்டைமான்களை மன்னர் நிலைக்கு உயர்த்த அடித்தளமிட்டவர், ஆவுடைராய தொண்டைமான்.

விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன்  ஆவடை ரகுநாத தொண்டைமான்  தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய சாம்ராஜ்யமாக உருவாகியது. விஜய நகர ராயர்களுடனான தொடர்பால் தொண்டைமான் மன்னர்களும் தங்கள் பெயரோடு ராய எனும் சொல்லை ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன. விசய நகர மன்னர் மூன்றாம் ஸ்ரீரங்க ராஜாவுக்காக 1639 இல் ஆவடி ரகுநாத தொண்டாமான் தற்போதைய புதுக்கோட்டைப் பகுதியை பரவ ராய மரபினரிடமிருந்து கைப்பற்றினார்.

பாண்டிய மன்னர்களுக்குப் பிறகு முதன் முறையாக இரண்ய கற்ப வேள்வி நடத்தி இரண்ய கற்ப யாஜி என்ற பெயரைப் பெற்றவர் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் காலத்திலேயே அதாவது கிபி 1645- 1672 ல் புதுக்கோட்டை பாளையத்தின் தலைவராக தொண்டைமான் குறிக்கப்படுகிறார். (மெகன்சி சுவடிகள்).

ஆவடை ரகுநாத தொண்டைமானுடைய புதல்வர் இருவரில் மூத்தவர் இரகுநாதராய தொண்டைமான். இளையவர் கிருஷ்ணா முத்து வீரப்ப நமன தொண்டைமான். இந்த ஆவுடை தொண்டைமானின் மகனான இரகுநாத தொண்டைமான், பிற்காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்தார்.

ரகுனாத ராய தொண்டைமான் :
*******************************************
ரகுனாத ராய தொண்டைமான் எனும் புதுக்கோட்டை மன்னன் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுடனும், திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் என்பவருடனும் நட்பு பூண்டிருந்தார். திருச்சி ராஜ்யத்தின் காவலராகவும் இந்தத் தொண்டைமான் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அப்போது இராம நாதபுரத்தை ஆண்ட மறவர் மன்னர் விஜய ரகு நாத கிழவன் சேதுபதி (1673 முதல் 1710) இவர்களுக்கு நெருக்கமாக ஆனார். இவரைக் கிழவன் சேதுபதி என்றே அழைப்பர். வரலாற்றில் புகழ்மிக்க இடத்தைப் பிடித்துவிட்டவர் இந்தக் கிழவன் சேதுபதி. கிழவன் சேதுபதி மனைவி காதலி நாச்சியார் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் சகோதரி ஆவார்.

கிழவன் சேதுபதி தொண்டைமானின் சகோதரி காதலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெள்ளாற்றுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதிகளை தொண்டைமான் வசம் கொடுத்தார் கிழவன் சேதுபதி. அந்தப் பகுதியைத் தான் விரிவுபடுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜ்யமாக ஏற்றுக்கொண்டு தொண்டைமான் ஆட்சி நடைபெற்றது. சேதுபதிகளின் வரலாறும் தொண்டைமான் ஆட்சியும் எனும் வரலாற்று ஏடுகள் இந்தத் தகவல்களையெல்லாம் கொடுக்கின்றன. வெள்ளாறு வரலாற்றில் பதிய காரணமாக இருந்தது தொண்டமானின் ஆட்சிக்கு எல்லைக்கோடாக இந்த ஆறு அமைந்த காரணத்தால்தான் என்பதையும் அறிய முடிகிறது. சோழ நாட்டின் எல்லை குறித்த ஒரு தமிழ்ப் பாடலும் இந்த ஆற்றை சோழ மண்டலத்தின் தெற்கெல்லையாகக் குறிப்பிடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். ரகுநாதராய தொண்டைமான் இப்படித் தன்னுடைய ராஜ்யத்தை விஸ்தரித்த காலமான 1686 முதல் அவர் ஆட்சி முடிந்த 1730 வரையில் மிக மகோன்னதமான நிலையில் இந்த ராஜ்யம் இருந்திருக்கிறது.

குளத்தூர் தொண்டைமான்
************************************

தொண்டைமான் ஆட்சிக்குப் புகழ் சேர்த்து ராஜ்யத்தை விரிவு படுத்திய ரகுநாத ராய தொண்டைமானின் காலத்தில் அவருடைய சகோதரர் நமன தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த குளத்தூர் எனும் பகுதிக்குத் தலைவர் ஆனார். இவருக்கு திருச்சிராப்பள்ளியை ஆண்ட நாயக்க மன்னரான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் நட்பு ஆதரவு கிடைத்தது. இவர் காலத்திலிருந்து குளத்தூர் தனி ராஜ்யமாக விளங்கி இங்கு ஆட்சி புரிந்தவர் குளத்தூர் தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நிலை 1750 வரை நீடித்தது. ஏனென்றால் 1750 இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடி, திருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.

புதுக்கோட்டையிலுள்ள குளத்தூர் பகுதியை ஆண்ட சொக்கநாத ராமசாமித்தொண்டைமான், தான் அளித்த கொடைகளையும், தன் முன்னோர் பற்றியும் இச்செப்பேட்டில் பொறித்துள்ளார். புதுக்கோட்டையின் முதல் மன்னரின் தந்தையான ராய தொண்டைமானை பற்றிய குறிப்பும் இச்செக்பேட்டில் உள்ளது.

" ராசராசவளநாட்டு பன்றிசூழுநாடு அன்பில் தெற்குலூரிலிருக்கும் இந்திர குல குலோத்பவரான காணியுடைய அரையர் மக்களில், இராயரால் பேர் பெற்ற ஸ்ரீமது ராய தொண்டைமானார்" என குறிக்கப்படுகிறார். (நாஞ்சியூர் செப்பேடு)

அம்புக்கோயிலில் கிபி 10 ஆம் நூற்றாண்டு வாக்கில் குடியேறிய தொண்டைமானின் கள்ளர் குடிகள், அரையர்களாக உயர்ந்ததை 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குறிக்கிறது. மன்னர்களுக்கு யானைப்படை தயார் செய்து அனுப்பிக்கொண்டும், அம்புகோயிலில் அஞ்சுகுடிகளுக்கு அரையர்களாக வாழ்ந்து வந்த தொண்டைமான்கள், பிற்காலத்தில் படிப்படியாக வீரத்தால் உயர்ந்து, புதுக்கோட்டை சமஸ்தானத்தை தோற்றுவித்து, இந்திய சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்துள்ளனர்.

திருநெல்வேலி தொண்டைமான்
********************************************

திருநெல்வேலியில் இருக்கும் தொண்டைமான் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்தப் பெரும்பாணாற்றுப்படை பாட்டுடைத் தலைவனாம் தொண்டைமான் இளந்திரையன் வழிவந்தவர்களே. இவர்கள் பரம்பரையிலே வந்தவர்கள்தான் புதுக்கோட்டை ஒன்றைக் கட்டி அதன் அரசர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த அரசப் பரம்பரையைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் ஏதோ குடும்பத்தில் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக புதுக்கோட்டையை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு நோக்கி நடந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்கள் தென்பாண்டி நாட்டில் பொதிகை மலைச் சாரலில் தங்கி வாழ்ந்திருக்கிறார்கள். திருக்குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் முதலிய இடங்களில் மடாலயங்கள் நிறுவி அறக்கட்டளைகள் நடத்தி இருக்கிறார்கள். அப்படி வந்து தங்கிய அரச சகோதரர் ஒருவரின் பரம்பரையே திருநெல்வேலி தொண்டைமான் பரம்பரை.

( தொண்டைமான் மன்னர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து புதுக்கோட்டை பகுதியில் குடியேறியதை , ஒட்டுமொத்த கள்ளர்களும் அப்போதுதான் அங்கே குடியேறியதாக சிலர் எழுதி வருவதை காணமுடிகிறது. ஆனால் கள்ளர்கள் அங்கே தொன்றுதொட்டு வாழ்ந்து வருவதற்க்கான பல கல்வெட்டு சான்றுகள் தெளிவாக உள்ளன. )

நன்றி : உயர் திரு . சியாம் சுந்தர் சம்பட்டியார்

Comments

  1. புதுககோட்டை அரசு கெஜட்
    சொல்லுது

    என்னன்னு
    மணியா

    சிவத்தெழுந்த பல்லவராயர்
    வேளாளர் னு

    வெள்ளாள ராசா

    சோழனும் வெள்ளாளன்
    சேரனும் வெள்ளாளளனே
    பாண்டியனும் வெள்ளாளனே

    வெள்ளாளன் உள்ளே சண்டையில் ஆள்விட்டு கள்ளர் பிடித்து கொண்டவை அதிகம். கண்ணந்தங்குடி வரலாறு காண்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்