தேவர் ஜெயந்தி
தேவர் ஜெயந்தி...தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். எனவே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல்., முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், ஜோதி ஏந்திவந்து அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர். தேவர் குருபூஜையன்று பசும்பொன்னிலுள்ள தேவர் ஆலயத்தினுள், தங்கக் கவசம் பூட்டப்பட்ட தேவரது சிலைக்கு மாலை அணிவித்தும் அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குவர். பசும்பொன் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக தென்மாவட்டங்களான தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுதும், மேலும் தலைநகர் சென்னையிலும் தேவர் குருபூஜை நாளன்று கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.
Comments
Post a Comment