ஸ்ரீ கந்தழீஸ்வரர் ஆலயம். குன்றத்தூர்
ஸ்ரீ கந்தழீஸ்வரர் ஆலயம்.
குன்றத்தூர்
சென்னை.
சோழர்காலக் கோயில் இது
குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர் இது.
ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்ட இடம் குன்றத்தூர் ஆகும்.
'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர்.
அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம்.
முருகன் பூஜித்த சிவன்:
தேவர்களை கொடுமைப்படுத்திய தாரகாசுரனை அழித்து பின் மனம் அமைதி பெற திருத்தணி நோக்கி புறப்பட்டார் முருகன்.
குன்றத்தூர் மலையில் தங்கி இருந்த முருகன், ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டையும் செய்து பூஜித்தார்.
அந்த சிவன், மலை அடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் தனி கோவில் கொண்டு அருள்புரிந்து வருகிறார்.
கந்தனால் உருவாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டதால் அவருக்கு இந்த பெயர் வந்தது.
முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது புறம் சேக்கிழாரின் கோவில் உள்ளது.
இடப் புறம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.
சேக்கிழாரின் இல்லம் இங்கு கோயிலாகியுள்ளது.
ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரை தெய்வங்களையும் காவேரி நதிக்கரை தெய்வங்களையும் வணங்கிவிட்டு தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார்
அங்கேயே தங்கினார் தன்னை இழந்தார்
சரணாகதி அடைந்தார்
சிவபெருமான் ஒருநாள் அவருக்கு அற்புத தரிசனம் தந்ததோடு அவரிடமிருந்த கர்வம் செருக்கு போன்றவற்றை அழித்தார்
கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம்
சேக்கிழார்
புகழ் பெயர் என பற்றி கொண்டிருந்த தனது பற்றுகளை நீக்கியதால் இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் எனப் பெயர் ஏற்பட்டது
சதுர வடிவ ஆவுடையாரில் பிரம்மாண்டமாக லிங்கத் திருமேனியராக சுவாமி அருள் பாலிப்பது சிறப்பு
அம்பாள் இங்கே நகை முகை வள்ளி
இங்குள்ள அம்மனை வழிபட்டால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்
பிரகாரத்தில் நர்த்தன விநாயகர் தட்சிணாமூர்த்தி துர்க்கை ரிஷபாரூடர்
அருள்பாலிக்கின்றனர்.
தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து வணங்கும் கோலத்தில் கண்ணப்பநாயனார் ஓவியம் உள்ளது
குமரனின் கோயிலுக்கு மேற்கே பரந்து கிடக்கும் ஏரியும், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கி.மு. 1000 ஆண்டு எனக் கணிக்கப் பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் களஞ்சியமே கிடைத்துள்ளது
குழிகளில் ஸ்வஸ்திகா அமைப்பில் தளம், கத்தி, மணிகள், பானைகள், குவளைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
ஏறத்தாழ 900 ண்டுகள் முன்,
சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், விஜயநகரப்பேரரசு காலத்தில் ஆரம்பித்து, 16ம் நூற்றாண்டுவரை இக்கோயில்களை நன்றாக காத்து திருப்பணிகளை செய்துள்ளனர்.
அதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
கிபி 1241 ஆம் ஆண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ ராஜனின் ஆட்சியில் இந்த ஆலயத்தில் திருப்பணி செய்த குறிப்புகள் கல்வெட்டில் உள்ளன
மூன்றாம் குலோத்துங்கனின் மகளை மணந்த அழகிய சீலன், இக்கோயிலை நன்கு பேணினான்.
அவனே சிதம்பரம் நடராசர் ஆலயத் தெற்கு கோபுரத்தையும் கட்டினான். காஞ்சியைசுற்றியுள்ள பல கோவில்கள் சீரமைக்கப் பட்டதில், கந்தழீஸ்வரர் கோவிலும் ஒன்று.
மற்றொரு கோயில் ஊரகப்பெருமாள் கோயில்.
பல்லவ மன்னனும் கிருஷ்ணதேவராயரும் இந்த கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்
1990 களில் ஆக்கிரமிக்கப்பட்டு
சிதிலடைந்த கோவிலை திருப்பணி செய்து இப்போது
புதிய பொலிவுடன் இருக்கிறார் சிவன்.
சேக்கிழார்
சேக்கிழார் என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார்.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் வெள்ளியங்கிரி மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார்.
இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர்
என்று பெயரிட்டனர்
இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர்.
சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்போன்ற பட்டங்களைப் பெற்றவர்.
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன்அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.
சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், அதன் காரணமாக சமண முனிவரான திருத்தக்க தேவரால் எழுதப்பெற்ற சீவகசிந்தாமணி எனும் நூலை படித்து இன்புற்றதாகவும் தெரிகிறது.
சீவகசிந்தாமணி என்பது களவிநூலாக இருந்தமையாலும், அந்நூல் இம்மைக்கும் மறுமைக்கும் துணை செய்யாது என்பதையும் எண்ணி சேக்கிழார் வருத்தம் கொண்டு, மன்னனுக்கு எடுத்துரைத்தார்.
மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார்.
அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார்.
அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான்.
அதன் காரணமாக சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அறுபத்து இரண்டு சிவத்தொண்டர்களின் வரலாற்றையும் ஊர் ஊராக சென்று அதிக தகவல்களை திரட்டினார்
சேக்கிழார். எழுதா இலக்கியம் எனும் நாட்டுப்புற பாடல்களையும், கல்வெட்டுகளையும், அடியார்கள் கதையும் கேட்டறிந்து, அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.
திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார்.
பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது.
இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார்.
அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன.
அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன.
அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார்.
பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானாக கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.
Comments
Post a Comment