அண்ணல் பேயத்தேவர்
அண்ணல் பேயத்தேவர்
=========================
கர்னல் பென்னிகுக் தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. அதில் மறைந்திருக்கும் இரத்த சரித்தித்தை பற்றி யாருக்கும் தெரியாது.
முல்லை பெரியார் அணை கட்டும் போது அதன் உடனிருந்து அனை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மற்ற சமூகத்தவரை காட்டிலும் 4000 கும் மேற்பட்ட கள்ளர்கள் அணை கட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அந்த காலகட்டத்தில் வனவிலங்கு மற்றும் மலேரியா காய்ச்சலுக்கும் பலியானோர் எண்ணிக்கை கணக்கில்லா. இதில் அதிகம் உயிர் தியாகம் செய்தவர்கள் கள்ளர்களே, மேலும் கர்னல் பென்னி குக் துணையாகவும், பாதுகாப்பகவும் இருந்தவர்கள் கள்ளர்களே. அதில் முதன்மையனவர் அண்ணல் பேயத்தேவர்.
உசிலம்பட்டி வட்டாரம் அம்மன் முத்தன்பட்டி என்ற கிராமத்தில் 178 ஆண்டுகளுக்கு முன் 1840 இல் மொக்கையதேவருக்கு ஒரே மகனாக பிறந்தார் அண்ணல் பேயத்தேவர். அவரது தாயார் இவரை பெற்று எடுத்து கொடுத்த பெருமையோடு உடல்நல குறைவால் இறைவனடி சேர்த்துவிடுகிறார். மனைவி இறந்த துயரத்துடன் கை குழந்தை பேயாதேவனாகிய தனது வாரிசை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அதுசமயம் அப்பகுதியில் இருந்த உற்றார் உறவினர் கை குழந்தையை வளர்க்க உதிவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்திக்கின்றனர். மொக்கயத்தேவர் சற்று வித்தியசமானவர். தனது மகன் மாற்றந் தாய் மடியில் வளர்வதை விரும்பவில்லை. ஊர் மக்களையும் பகைத்து கொள்ள விரும்பவில்லை.
கை குழந்தை பேயத்தேவனை தோளில் போட்டுக் கொண்டு ஊர் எல்லையை கடந்து கம்பம் பள்ளத்தாக்கு வந்தார். இப்பகுதி இவரை கவர்ந்துவிட, இப்பகுதில் தங்கினார். இவரது மகன் பேயத்தேவன் வளர்ந்து வாலிப வயதை அடைந்ததும், மகன் வெளியில் ஆங்காங்கே போய் வர குதிரை ஒன்று வாங்கி தருகிறார். இவர்கள் விவசாயம் செய்ய பூமி தேடுகிறார்கள். கூடலூர் பக்கத்தில் உள்ள குள்ளப்பகவுண்டன் பாட்டியை தேர்வு செய்து, காடுகளாக இருந்த இந்த பூமியை, தங்களது உழைப்பாலும், புத்தி சாதுர்யத்தாலும் வளமான விளை நிலங்களாக மாற்றினார்கள். பேயத்தேவர் ஒருமுறை மழை வேண்டி கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாளை வழிபட கூடலூர் வந்தவர், நிர்வாகம் மற்றும் போக்குவரத்துக்கு வசதிக்காக இவ்வூரையே தனது வசிப்பிடமாக மாற்றிக்கொண்டார்.
அந்திமகாலம் வரை தனது மனைவி பார்வதியம்மாள் மற்றும் வாரிசுகளுடன் இங்கு வாழ்ந்து வந்தார். இங்கு வந்தடைந்தபின் இப்பகுதிலும் விளைநிலங்களில் நல்ல மகசூல் கண்டார்.
முல்லை பெரியாரின் நீரை தேக்க பெரியார் அணையை கட்டிய பென்னிகுக்கோடு நட்பை ஏற்படுத்தி கொண்டார். அவருக்கு தனது சொந்த பொறுப்பில் காடு வெட்டி கருத்த கண்ண தேவர், ஆனை விரட்டி ஆங்கத் தேவர் என்று இரு நபர்களை அனுப்பி வைத்தார். இவர்கள் இருவரும் பென்னி குக்கின் மெய்க்காப்பாளர்களாக நாட்டு துப்பாக்கியுடன் வலம் வருவார்கள். பலமுறை பென்னிகுக்கை காட்டு விலங்குகளிடம் இருந்து காத்தனர். பென்னிகுக் குதிரையில் இவர்கள் துணையுடனே ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இவ்விபரம் பென்னிகுக் நாட்குறிப்பில் உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்த போது, பேயத்தேவர் பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். பேயத்தேவர் மேற்பார்வையில் குறுவனத்தில் உள்ள சரலை கல்லை சுண்ணாம்பாக்கி அரைத்து அதன் கலவையை விஞ்ச் மூலம் குமுளிக்கு அனுப்பி பின் படகு மூலம் அணைக்கு கொண்டு செல்வார்களாம்.
அவரது நட்பின் பலனாக இன்றும் கீழகூடலூரில் பெரியாற்றின் குறுக்கே பேயத்தேவர் கட்டிய அணையும் பேயத்தேவர் வாய்காலும் பெயர் சொல்லி விளங்கி வருகிறது.
இவ்வாறு உதவி புரிந்த பேயத்தேவர் பெயரில், ஒரு கால்வாய் அமைக்கவும், இக்கால்வாயில் எப்போதும் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் வகையில், கால்வாய் தலை மதகை மூடக்கூடாது, எனவும் பென்னிகுவிக் அறிவித்திருந்தார். இதன் காரணமாக இதுவரை, கூடலூர் காஞ்சிமரத்துறையில் உள்ள பேயத்தேவன் கால்வாயை இதுவரை மூடவில்லை. பேயத்தேவன் கால்வாயால் ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் விவசாயம் நடந்து வருகிறது. இக்கால்வாயின் தலைமதகை எப்போதும் மூடக்கூடாது என்ற அரசு ஆணை உள்ளது. கர்னல் பென்னிகுக் பேயத்தேவனிடம் நன்றி மறவாமல் இருந்தார்.
கூடலுாரில் பழமையான கூடலழகிய பெருமாள் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது, மாலையில் கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைக்கின்றனர். உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அண்ணல் பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். உற்சவருக்கு பால், தயிர் மூலம் அபிேஷகம் நடத்தப்படுகிறது.
மானூத்து கிராமத்தில் வாழ்ந்து வந்த எட்டுப்பட்டான் பங்காளிகள் மானூத்தில் கோயிலடியில் கூட்டம் போட்டு பேயத்தேவர் அவர்களிடம் ஓர் வேண்டுகோள் வைக்கின்றனர். குலதெய்வம் அருள்மிகு பெத்தனசுவாமி திருக்கோயில் கட்டி குடுக்க வேண்டுகின்றனர். இந்த வேண்டுகோளை ஏற்று தனது முழு செலவில் கட்டி கொடுத்தார். இந்த கோவில் 2014 ஆம் ஆண்டு வரை இருந்தது. தற்போது உள்ள கோவில் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவில் மூலஸ்தான நுழைவாயில் உள்ள கல்நிலை. தேக்குமர கதவு 126 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் பேயத்தேவர் நிறுவியது.
Comments
Post a Comment