கல்லீரல்

#கல்லீரல்_பிரச்சனைக்கு #உணவு_முறைகள் - #இயற்கை_மருத்துவம்

பைல் சுரப்பு என்பது பித்தமே! தேவைக்கு அதிகமான பைல் சுரப்பு அல்லது சுரப்பின் ஓட்டத்தில் ஏற்படும் தேக்கம் ஆகியன பித்தம் அதிகமாவதையே காட்டுகிறது.

ஆயுர்வேத முறைப்படி கல்லீரல் ‘அக்னியின் இருப்பிடம்’ ஆகவே சுலபமாக உஷ்ணம் அடைந்து பலதரப்பட்ட வீக்கம் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றது.

கல்லீரலில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நொதிகள் செரிமானம் ஆன உணவை, உடலின் ஐம்பொறிகளின் கட்டமைப்புக்குத் தேவையான ஐந்து மாற்றுகின்றது.

பித்த சமநிலை மாறுவதால் உண்டாகும்.
எதிர்மறை எண்ணங்கள் கோபம், பொறுமை, எரிச்சலடைதல்
ஆகியன. பித்த தோ‌ஷம் சரியாக இருக்கும் போது வரும் நேர்மறை எண்ணங்கள், தைரியம், உறுதி, வைராக்கியம், உற்சாகம் ஆகியன. இந்த உணர்வுகளில் தடங்கல், தடுமாற்றம் நேரும் போது, கல்லீரல் செயல்பாடுகளில் மாறுதல் உண்டாகின்றது.

#காமாலை

கல்லீரலில் சுரக்கும் பைல் சுரப்பு தேவை போக சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் சேர்ந்து வெளியேற்றப்படும். பைல் சுரப்பியில் அல்லது குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அது சிறுநீர், மலத்துடன் சென்றடைய முடியாமல் ரத்தத்தில் கலந்துவிடும். உடல் முழுவதும் மஞ்சள் நிறமாகிவிடும். சிறுநீரும் அதிக மஞ்சளாகவே இருக்கும். இதுவே மஞ்சள் காமாலை.

சிலசமயம் #அனிமியா எனப்படும் ரத்த சோகையை உண்டாக்கும் காரணிகளிலும் காமாலை உருவாகும். பைல் சுரபி சுரப்பது குறைந்தும் இவ்வியாதி வரும். ஆகவே எந்த வழியில் வந்தது என்று பார்ப்பது மிகவும் முக்கியம். காமாலை, கல்லீரல் வீங்குவதால் வரும் நோய். ஆரம்பத்தில் கிருமித் தொற்றால் வரும். தவறான உணவு முறை மற்றும் பித்தத்தை அதிகப்படுத்தும் காரணிகளால் கல்லீரல் சுருங்க நேரிடும்.

இத்தொற்று நோய்க்கான வைரஸ் கிருமிகள் ஆபத்தானவை. வேகமாகப்பரவுபவை. ஆனால் பேக்டிரியாக்கள் வேகமாக பரவாது. அறிகுறிகளும் சீக்கிரமாகத் தெரியாது. மெதுவாக உடல் பலவீனம் அடையும். மோசமான உணவு, தண்ணீர், சுகாதாரக்குறைபாடு ஆகியன இந்நோய்க்கு காரணமாகின்றன.

இந்நோய் உண்டாகும் போது உடல் பலவீனமாகும். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் செரிமானம் ஆகாது. ரத்தச் சிவப்பணுக்கள் அதிகம் அழியும், உடல் முழுவதும் அரிப்பு ஏற்படும். கல்லீரலில் இருக்கும் பகுதியில் வலி இருக்கும். பசியின்மை, வாந்தி, மயக்கம், காய்ச்சல் வரும்.

நோய் அதிகமாகக் காரணம் அதிகப்படியான எண்ணெய், கொழுப்பு சத்துள்ள உணவுகள், அசைவம், இனிப்பு ஆகியன. சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்தின் வளர்சிதை மாற்றத்துக்கு கல்லீரலே காரணம். ஆகவே இவ்வுணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். புகை, மது ஆகியவையும் கல்லீரலை பாதிக்கும்.

#பித்தப்பைக்கற்கள் :

பைல் சுரப்பு தேங்குவதால் அல்லது அதன் ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை சுவர்கள் வீங்கி, வலி உண்டாகும். பித்த தோ‌ஷ பாதிப்பால் வரும் பித்தப்பை கற்கள், மஞ்சள், பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் கூரிய கோணங்களுடன் இருக்கும்.

#வாதத்தால்_வருபவை:

கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் உலர்வாக, கடினமாக இருக்கும், வலி கடுமையாக இருக்கும். வீக்கமும், காய்ச்சலும் அவ்வளவு அதிகமாக இருக்காது. கபத்தால் வருபவை மென்மையாக, உருண்டையாக, வெண்மையாக, சளியைப் போன்று இருக்கும், வலி குறைவாக இருக்கும்.நோய் கடுமையாக இருக்கும் பட்சத்தில் மலமிளக்கி (பேதி) மருந்து, கல்லீரலைச் சுத்தப்படுத்தும் மூலிகைகளுடன் சேர்த்துத் தரப்பட வேண்டும்.

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மூலிகைகளே, பித்தப்பை கற்களைக் கரைக்கும். ஆனால் அத்துடன் கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டும் மல்லி, லெமன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

#உணவும்_சிகிச்சையும் :

* பழைய அரிசியில் சமைத்த சாதத்தில் மோர் கலந்து தர வேண்டும்.

* ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, கரும்புச்சாறு நல்லது.

* பாசிப்பருப்பு மிகவும் நல்லது. கூட அரிசியை சேர்த்து சமைக்கலாம்.

* அசைவம், சீஸ், எண்ணெயில் பொரித்த உணவுகள், சர்க்கரை, இனிப்பு ஆகாது. நோய் கடுமையான நிலையில் பால், நெய் இவற்றைக்கூடத் தவிர்க்க வேண்டும்.

* கைப்பிடி அளவு கறிவேப்பிலை, கைப்பிடி அளவு கொத்தமல்லி, ½ கைப்பிடி அளவு வெட்டுவாய்ப்பூண்டு ஆகியவற்றை அரைத்து துவையல் செய்து கொடுக்கலாம்.

* சோற்றுக்கற்றாழையுடன், மஞ்சள், மல்லி கலந்து ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி உணவுக்கு முன் தருவது நல்லது.

* மலமிளக்கி மருந்து முதலில் தரப்பட வேண்டும்.

* திரிபலாக் கஷாயம் 1 அவுன்ஸ் வீதம் 2 வேளை தரலாம்.

* நவாயாச சூரணம் 300 மி.கி. தேனுடன் கலந்து தினமும் இருவேளை தரலாம்.

* வெறும் வயிற்றில் 2, 3 செம்பருத்தி பூக்களை சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புகள் குறையும்.

* கல்லீரல் குழாய்களில் அடைப்பு இருந்தால் ‘அப்ரகம்’ என்ற கனிமத்தின் பஸ்மம் நல்ல மருந்து. 100-500 மி.கி. வரை தரலாம்.

* சிக்கரி 2 கிராமுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து ½ லிட்டராகக் கொதிக்க வைத்து 3 மாதம் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தப்பை கற்கள் கரையும். கல்லீரல் பாதிப்புகளுக்கு நன்மை தரும்.

* சிக்கரி சூரணத்தை பசும் கோமியத்துடன் கலந்து 3 மாதம் சாப்பிட குணம் தெரியும்.

* ஈரல் செயல்பாடு குறைவுக்கு ஹெபடைட்டிஸ் ஙி, சி க்கு கோபுரந்தாங்கி நல்ல மருந்து. புடமிட்ட சூரணம் 2 கிராம் காலை, மாலை இருவேளையும் சாப்பிடலாம்.

* 1 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி மஞ்சள், 2 தேக்கரண்டி கலந்து காலை 6 மணி, மாலை 6 மணி எனக்கொடுக்க ஈரல் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

* ஈரல் வீக்கம், சுருங்குதல் ஆகியவற்றுக்கு கொள்ளுக்காய் நல்ல மருந்து. 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் வேர்ச்சூரணம் கலந்து கொதிக்கவிட்டு ½ லிட்டராக சுருங்கிய பின் 3 வேளை உணவுக்கு முன் சாப்பிட குணம் தெரியும்.

* ஹெபடைட்டிஸ் பி தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இம்மருந்து கொடுத்தால் குணம் தெரியும்.

* கொள்ளுக்காய் வேர்ச்சாம்பல் 50 மி.கி. காலை மாலை கொடுத்தால் ஈரல் சுருக்கத்துக்கு நல்லது.

* ஈரல் சுருங்குவதற்கு ஈஸ்வர மூலிகை நல்ல மருந்து.

* வெட்டுவாய் பூண்டு ஈரல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து. பசும்பால், வெட்டுவாய்ப்பூண்டுச்சாறு கலந்து தினமும் 2 வேளை உணவுக்கு முன் 3 மாதம் சாப்பிட நன்மை தரும்.

* அடிக்கடி காமாலை வருபவர்கள் 200 மில்லி பசும் கோமியத்துடன் 1 கிராம் ஸிரீ‌ஷ மரத்தின் வேர்ப்பட்டைச் சாம்பல் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். ½ மணி நேரம் வேறு ஏதுவும் சாப்பிடக் கூடாது.

* சிறுநீரகம் பழுதாகும் போது கண்டிப்பாக ஈரல் பாதிப்பும் இருக்கும். ஆகவே சிறுநீரகப்பாதிப்புக்கு கொடுக்கும் மருந்துகளுடன் சேர்த்து ஈரலுக்கும் மருந்து கொடுக்கலாம்.

* கீழாநெல்லி, கடுக் காய், வல்லாரை, கரிசிலாங்கண்ணி, சீந்தில் கொடி ஆகியன நன்மை தரும்.

* கடுமையான ஹெபடைட்டிஸ் உடன் ரத்த சோகையும் சேர்ந்திருக்கலாம். ஆகவே இரும்புச்சத்து தரும் மருந்துகளை கொடுக்கலாம்.

* பொதுவாக சிகிச்சை யால் பித்தம் குறைய வேண்டும்.

* முழு ஓய்வு தேவை.

* உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வெயிலில் நடத்தல், நீண்ட பயணம் ஆகியன தவிர்க்கப்பட வேண்டும்.

* உணர்ச்சி வசப்படக் கூடாது.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்