தமிழரின்_சிந்துநதி_ஆதாரம்

#பாகிஸ்தான் பாதுகாத்து வைத்து இருந்த #தமிழரின்_சிந்துநதி_ஆதாரம்
சிந்து சமவெளியில் கிடைத்த 4000 ஆண்டு களுக்கு முந்தைய #தமிழ்செப்பேடு

அண்மையில் பாகிஸ்தானில் தனியார் தொகுப்பில் திரட்டி வைக்கப்பட்டிருந்த ஒன்பது செப்பேடுகள் வெளிவந்தன.

சிந்துவெளி எழுத்தில் அமைந்த இந்த செப்பேடுகள் 2011 ஆம் ஆண்டு “ரிக்கு வில்லிசு” என்பவரின் பார்வைக்கு வந்தன.

XRF என்னும் அறிவியல் காலக்கணிப்பு முறையில் ஆராய்ந்து இதன் காலம் கி.மு 2600 - கி.மு 2000 (4000 ஆண்டுகள் முந்தையது) என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த செப்பேடு தமிழில் 34 குறியீடுகளை கொண்டுள்ளது. வடிவத்திலும் மிக பெரியது.
இதுவரை 5000 தமிழ் செப்பேடுகள் சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செப்பேட்டில் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியனைப்பற்றி குறிக்கப்பட்டுள்ளது.

செப்பேட்டின் இடப்புறத்தில் குள்ளநரித் தலையோடு ஓக நிலையில் அமர்த்த சித்தரின் உருவம்

நக்கநியனைக் குறிப்பதாக இருக்கலாம்.

செப்பட்டில் இருக்கும் சொற்றொடர் :-
" கூனயத்தம் சாஞ்சகன் அப்புந்தி தங்கவிகைப் பண்ணன் புணையன் காளண்ணன் பண்ணிவச்ச கப்ப(ல்) அவில்ந்து (அமிழ்ந்து) வந்த நக்கனியன் "

பொருள் :-
கூனயத்தம் என்னும் ஊரில் வாழ்ந்த 'சாய்ந்தகண் அப்புந்தி தண்கவிகை பண்ணன் ' என்பவனுக்கு காளண்ணன் என்னும் கப்பல் கட்டுபவன் புணையாக அதாவது உற்ற தோழனாக இருந்தான். காளண்ணன் கட்டிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த நக்கணியன் என்பதே இந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள செய்தியாகும்.

இது 14 தமிழ் சொற்களை கொண்ட நெடுந்தொடர்.

இதனை மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதலாம்.

இந்த செப்பேட்டின் இடது புறத்தில் குள்ளநரி முகம் கொண்ட ஓக நிலையில் அமர்ந்த சித்தரின் உருவம் உள்ளது.

இதிலிரு ந்து இரண்டு செய்திகள் கிடைக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கப்பல் கட்டி கடலை ஆட்சி செய்துள்ளனர் என்பது ஒன்று;
 ஓக கலையில் அப்பொழுதே சிறந்து விளங்கியுள்ளனர் என்பது இரண்டாவது.

இத்தகவல் பேராசிரியர் இரா.மதிவாணன் எழுதிய "சிந்துவெளியில் கிடைத்த முந்துதமிழ்ச் செப்புப் பட்டயம் " என்னும் கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.

(நன்றி Sundar P)
பதிவு- திணையகம்

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்