சோழன்

#சோழன்

பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான்,
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்:
மன்னன் வளவன், மதில் புகார் வாழ் வேந்தன்
பொன் அம் திகிரிப் பொரு படையான் என்பரால்...

புகார் அரசன் வளவன் இமயத்தில் தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான். அவனைச் சக்கரப் படை கொண்ட திருமால் என்றே சொல்வர்...!

-------------------------------------------------------------------------------------
சேரன் சோழன் பாண்டியன் - #திருமால்
------------------------------------------------------------------*-

திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேன் என்பது போல மன்னர்களை திருமாலின் அம்சமாகவே கருதுவது மரபு !
அவனே செல்வத்திற்கும் நிலத்திற்கும் அதிபனாக இருப்பதால் திருமகள் மற்றும் நிலமகள் நாயகனின் அம்சமாக கருதுவர்.

தமிழரின் பழந்திணை தெய்வங்களுள் முக்கியமாவர் மாயோன் எனும் திருமால், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இந்த மாயோனை கொண்டாடுகின்றன.

தமிழரின் முதன்மைக் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பகுதி ஆய்ச்சியர் குரவை, மதுரைக்கு சிலம்பு விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் இறந்துபட அந்நேரம் ஆயர் வீட்டில் தீநிமித்தங்கள் தோன்றுகிறது, எனவே மாதரி முதனாலானோர் குரவை ஆடி கண்ணனை ஏத்துகின்றனர். அதில் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களை அவர்களின் வீரச்செயல்களை சொல்லி அவர்களை மாயோனைப் போன்றவரே என்று கூறி வாழ்த்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்