பாண்டியன்
#பாண்டியன்
கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம்,
தேவர் கோன் பூண் ஆரம், தென்னர் கோன் மார்பினவே:
தேவர் கோன் பூண் ஆரம் பூண்டான் செழுந் துவரைக்
கோ குலம் மேய்த்து, குருந்து ஒசித்தான் என்பரால்.
கோக்காத சந்தன மாலையும், கோத்த முத்து மாலையும் தேவர் கோன் இந்திரன் மாலையையும் தென்னவன் தன் மார்பில் சூடிக்கொண்டான். அவனை, குருந்த மரம் சாய்த்த கண்ணன் என்றே சொல்வர்...!
-----------------------------------------------------------------------------------
சேரன் சோழன் பாண்டியன் - #திருமால்
------------------------------------------------------------
திருவுடை மன்னரை காணில் திருமாலைக் கண்டேன் என்பது போல மன்னர்களை திருமாலின் அம்சமாகவே கருதுவது மரபு !
அவனே செல்வத்திற்கும் நிலத்திற்கும் அதிபனாக இருப்பதால் திருமகள் மற்றும் நிலமகள் நாயகனின் அம்சமாக கருதுவர்.
தமிழரின் பழந்திணை தெய்வங்களுள் முக்கியமாவர் மாயோன் எனும் திருமால், சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இந்த மாயோனை கொண்டாடுகின்றன.
தமிழரின் முதன்மைக் காப்பியமான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பகுதி ஆய்ச்சியர் குரவை, மதுரைக்கு சிலம்பு விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் இறந்துபட அந்நேரம் ஆயர் வீட்டில் தீநிமித்தங்கள் தோன்றுகிறது, எனவே மாதரி முதனாலானோர் குரவை ஆடி கண்ணனை ஏத்துகின்றனர். அதில் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களை அவர்களின் வீரச்செயல்களை சொல்லி அவர்களை மாயோனைப் போன்றவரே என்று கூறி வாழ்த்துகின்றனர்.

Comments
Post a Comment