முருகா சரணம்

சுழித்தே ஓடும் புதுவெள்ளம் போல்
களித்தே மயங்குது  என்மனஇல்லம்

பழித்தே பேசும் பொல்லா மனிதரிடையே
....அன்பை
பொழிந்தே பேசும் அம்மனிதம் என் வரம்

சலித்தே வாழ்ந்தேன் உலகினரை
....நினைந்தே
தனித்தே வாழ்ந்தேன் உலகினரை
....வெறுத்தே

எங்கிருந்தோ வந்தார் என் முருகன் போல்.....பக்கலில்
அமர்ந்தே என் கதை கேட்டார்

அருளமுதம் பருகி வரும் உனக்க ுபொருள் நஞ்சு எதற்கு
போதுமென்ற மனமே பொற்குவியல்

வேலை கைபிடித்தோனை உள்ளமதில்
...கொண்டாயே
வேறு என்ன வேண்டும் உனக்கு வாழ்வில்

பொருள்கொண்டோரைத்தானே அய்யா
...போற்றுகிறது இவ்வுலகு
அருள் பெற்றோர் நிறைவாக இயலவில்லையே
நோயுற்று வீழ்ந்து துயருற்று வாழ்வா
...வாழ்க்கை

நிலையற்ற செல்வம்இருந்தென்ன
..போயென்ன
நிலைபெற்றசெல்வம் அவன் அருள்
...ஒன்றே
விலையற்ற மருந்தோ உன் அருகில்
துயருற்று ஏன்கலக்கம்
மலைமகள் சேய் தரும் திருநீறு பூசு
மனக்கலக்கம் மறைந்து விடும்பாரு

இன்பம் துன்பம் வாழ்க்கைசகரத்தின்
...இருபகுதி
இதுவும் வரும் அதுவும் வரும் அஞ்சாதே

திருக்கை வேல் அழகன் அருள் என்றும்
...உண்டு
இருகை கொண்டு அவன் பாதம் பற்று
தொழுகை துவள்கை அன்பரை
...மறந்்தாயா
தோன்றுவான் உன்முன் உன்துயர்
..துடைக்க விரைவாக

முருகாசரணம்

🙏🙏🙏

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்