நவதிருப்பதி ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம் !

நவதிருப்பதி ஸ்ரீ வைகுண்டம் திவ்ய தேசம் !
பவித்ரோத்ஸவத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கள்ளபிரான் தரிசனம் !!

ஸ்ரீவைகுண்டம் நகரில் திருட்டுத் தொழில் செய்து வந்த காலதூஷகன் என்ற திருடன்,

வைகுண்ட நாயகரை வழிபட்டுப் பின் தனது தொழிலைத் தொடங்குவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான்..!

கிடைத்த பொருளில் பாதியைப் பெருமாளுக்கு காணிக்கையாகச் செலுத்திவிட்டு ...

மீதியைத் தன் தோழர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் தானம் செய்து வந்தான் !

ஒருமுறை அரண்மனைக்குத் திருடச் சென்றபோது இவனுடன் சென்றவர்கள் மாட்டிக்கொள்ள ..

இவன் மட்டும் தப்பிவிட்டான். அரசன் இவனைப் பிடித்துவர காவலாளிகளை அனுப்பினான் !

காலதூஷகன் வைகுண்டநாதரிடம் வேண்ட அவனுக்காகப் பெருமாள், காலதூஷகன் உருவில் அரசவைக்குச் சென்றார் !

அரசனிடம், அவன் குடிமக்களைச் சரிவர காக்கத் தவறியதை உணர்த்தி, அரசனுக்கும் காலதூஷகனுக்கும் காட்சிதந்து அருளினார் !

திருடனாக வந்தமையால் பெருமாள் இங்கு கள்ளபிரான் என்றும் சோரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார் !

(காரண பெயரின் விளக்கம்)

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்