சிவகங்கைச் சரித்திரக்கும்மி

சிவகங்கைச் சரித்திரக்கும்மி என்ன சொல்கிறது:
மருதிருவர்,
"அன்றிரவு பாளைய மங்கிருந்து
ஆதித்த னுதித்த வுடனெழுந்து
பாட்டை மார்க்கத்தில் சாலை வழியாகப்
பாளையம் வருகிற வேக மென்ன
தாட்டீக மாகவே கோச்சடை கருப்பண்ண சாமி
முன்பாக இறங்க லுற்றார்
கோட்டை மதுரையி லத்தயனிருந்த
கொம்பன் மல்லாரி ராயனுந்தான்
"மருது இருவர்படை வாரதினால்
மதுரைக்குக் கிழக்கே விடேன்"
என்று சுறுசுறுப் பாகப் படைகூட்டி......"
எதிர்க்க ஆயத்தம் செய்கிறான். இந்தச்செய்தியை மருதுவிடம் சொல்கிறார்கள். இப்போது சிவகங்கை சரித்திர அம்மானை சொல்வதைக்கேட்போம். அதுதான் இன்னும் graphical ஆகவும் dramaticஆகவும் சொல்கிறது.
"கண்டவர்கள் வந்து கைகூப்பித்
தெண்டனிட்டு விண்டார் மருதிடத்தில்....."
பெரிய மருது உடனே எழுந்து........
வெஞ்சமருக் கஞ்சாதான் வெள்ளைமரு
தேந்திரதுரை
அஞ்சுநூறு காலாளும் அசுவமது அம்பதுடன்
"எங்கவன், மல்லராவு?
யெவன் அவனைக் காட்டுமடா!
எங்கே யவன்சமர்த்தை இனிக்காண வேணுமடா!"
"காட்டீர் இவன் எனவே! கைவளரிக்
கிப்போது வாட்டமடா,
மெத்த வாய்த்த இரை இல்லையென!
ஆதலால் நான் இவனை அறிந்துவர வேணும்!"
என்று ஓதி மருதுதுரை ஒடுங்காத கோபமதாய்,
அண்டி வலுவுடனே அவைபறக்கக் கண்களிலே
தண்டிகையை விட்டுச் சடுதியில் கீழிறங்கிப்
பார்த்தார் கிழக்கு முகம்;
பார்ப்பளவில் நின்றவர்கள் சாத்துவார்,
"மல்லராவு தானிவனே!" யென்றுரைத்துக்
கைநீட்டிக் காட்டக் கண்டுஉருத் தானறிந்து,
செயிவளரி தன்னைத் திருமால் முதலையின்மேல்
வீசிவிட்ட சக்கரம்போல்
பெரிய மருதேந்திரன்இவன் வீசினான்; போய்வளரி
விலகாமல் மல்லராவு தலையை
நிலைகுலையத் தானறுத்துத் தாங்காமல் வலுவாய் வடகரையின் வாய்க்காலில் போட்டதுவே!"
வளரி என்பது வளைதடி என்றும் சொல்லப்படும் ஒரு ஆயுதம். பல விதங்களில் அவை அமைந்திருக்கும். சாதாரணமாக மரத்தால் செய்யப்படது. சிறிசும் பெரிசுமாக அம்புடும். வளைந்திருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். விளிம்புகள் பட்டையாக ஆக்கப்பட்டு, விளிம்புகள் கூராகவும் செய்யப்படும். இந்த வகை வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப் படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும். கழுத்து வெட்டப்படக்கூடியதுதானே. இல்லையா? அத்தனை தூரத்தில் நின்று கொண்டு, பெரிய மருது சேர்வைக்காரர் வளரியை வீசியிருக்கிறார். அது மல்ஹர் ராவின் தலை அறுத்து, அப்பாலிருந்த வாய்க்காலின் கரையின் மேல் வீசிவிட்டது.-----maya thevar

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்