ஏழுமலை ஏறிச் சென்று

ஏழுமலை ஏறிச் சென்று - அந்த
ஏழுமலை யப்பனை சரணடையுங்கள்!
வாழும் நாட்கள் முழுதும் - அந்த
வெங்கடாஜல பதியே கதியென்றிருங்கள்!    (ஏழுமலை)

ஆதி சேஷனின் ஏழு தலைகளே - அற்புத
ஆனந்தமான ஏழு மலைகள்!
சேஷாத்ரி மலையேறும் சேவார்த்திகளே!- எல்லா
ஷேமங்களும் பெற்று வாழ்ந்திடுங்கள்!     (ஏழுமலை)

நீலாத்ரி மலைதனை தாண்டிடுங்கள் - நீங்கள்
நினைப்பது யாவையும் நிறைவேற்றிடுங்கள்!
கருடாத்ரி மலையினைக் கடந்திடுங்கள் - உங்கள்
கனவுகள் அனைத்தையும் நனவாக்கிடுங்கள்     (ஏழுமலை)

அஞ்சனாத்ரி மலைமீது ஏறிடுங்கள் - இனி
அஞ்சவேண்டாம் அவனை நம்பிடுங்கள்!
விருஷபாத்ரி மலையேறி சேவியுங்கள் - வரும்
வருஷமெல்லாம் விசேஷ வருஷங்கள் !    (ஏழுமலை)

நாராயணாத்ரி மலைதனை நாடிடுங்கள் - ஓம்
நமோ நாராயணாயென்று பாடிடுங்கள்!
வெங்கடாத்ரி மலைமீது வேண்டிடுங்கள் - அந்த
வேங்கடவன் விஸ்வரூபம் கண்டிடுங்கள்     (ஏழுமலை)

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்