கம்பர்

கம்பர்-- சோழநாடான நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருவழுந்தூர் என்றழைக்கப்படும் தேரழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் புதுவையில் திரிகார்த்த சிற்றரசனாக விளங்கிய சரராமன் என்ற சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலியவை.

கம்பரை இவருடைய காலத்துச் சோழ அரசரும் பாராட்டி இவருக்கு கம்பநாடு என்று பெயரிடப்பட்ட பெருவாரியான நிலத்தை அன்பளித்தார்; கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டத்தையும் சோழ அரசரே இவருக்கு வழங்கினார். இவர் கம்ப இராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலிய ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.

கம்ப இராமாயணம் (Kamba Ramayanam)
ஏரெழுபது (Erezhupzthu)
திருக்கை வழக்கம் (Thirukkai Vazhakkam)
சரஸ்வதி அந்தாதி (Saraswathi Anthaathi)
சடகோபர் அந்தாதி (Sadakobar Anthaathi)
சிலையெழுபது (Silaiyelupathu)

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்