தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?

தெய்வத்திருமகனார் சாதித்தலைவரா?சொல்லுங்கள் இல்லை என்று.-----1960 ல் புளிச்சிகுளத்தில் தனக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி இருந்த தேவர், திருச்சுழி பதிவாளரை, தம் இருப்பிடத்திற்கு அழைத்து ஓர் இனாம் சாசனத்தை பதிவு செய்தார். அதில் தன்னுடைய சொத்துக்களை 17 பங்காகப் பிரித்து அவற்றில் ஒரு பாகத்தை தனக்கு வைத்துக் கொண்டு மீதி 16 பங்கை 16 பேருக்கு எழுதி வைத்தார்.அதில் பசும்பொன்னை சேர்ந்த அரிஜன வகுப்பில் பிறந்த வீரன், சந்நியாசி, என்ற இருவருக்கும் இரண்டு பாகங்களை ஒதுக்கி பசும்பொன் தேவர் பத்திரப் பதிவு செய்தார். ஆம்! தன்னுடைய சொத்துக்களை அனுபவிக்கும் உரிமையில் இரண்டு அரிசனங்களுக்கும் எழுதி வைத்த பெருந்தகையாளர் பசும்பொன் தேவர்.
பல தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், தேவர் திருமகனாரின் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி இருந்து தங்களது கல்வி உணவு உடை தேவைகளை சிறப்பாக பெற்றிருக்கிறார்கள். தேவர் திருமகனாரின் வீட்டின் சமையல் கூடத்தில் அவருக்கு உணவு படைத்ததவரும் ஒரு தாழ்த்தப்பட்டவரே. அந்த அளவிற்கு தேவர் திருமகனார் ஏழை எளிய மக்களை நேசித்தவர்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்