மானம்பாடி
மானம்பாடி
கும்பகோணம்- திருப்பனந்தாள் பெருவழியில் சோழபுரத்தை ஒட்டி மானம்பாடி என்னும் சிற்றூர் ஒன்றுள்ளது. இங்குள்ள சிவாலயம் இராஜேந்திரனின் பிறிதோர் படைப்பான பழையாறை பஞ்சவன் மாதேவீச்சரத்தினை ஒத்தே காணப்படுகிறது. இவ்வழகிய கற்றளியில் தென்புரத்தில் நடராஜப் பெருமாளின் தேவகோஷ்டம் ஒன்றுள்ளது. இக்கோஷ்டத்தை ஒட்டிய சுவரில் மாமன்னன் இராஜேந்திர சோழனும் அவனது தேவியும் மற்றும் சுற்றத்தாரும் ஆடல்வல்லானை வணங்கும் கோலத்தில் காட்சி நல்குகின்றனர்.
Comments
Post a Comment