திருப்பதி மூர்த்தி

திருப்பதி-------------------திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள் மிகவும்
விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார ரூபத்தில்
எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை பக்தர்களின் குறை
தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன் காரணமாகவே முப்பத்து
முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும், இத்திருமலைமேல் வந்த
எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து வருகின்றனர்---------------------------------------------ஸ்ரீனிவாசன் ஈண்டெழுந்தருளியமைக்கு காரணம்
பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின்
ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத் தொடங்கியது.
எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது. உலகம் நாளுக்கு
நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்பொறாத முனிவர்கள், கலியின்
கொடுமை குறைந்து உலக நன்மைக்காக காஷ்யப மகரிஷியின் தலைமையில்
ஒரு பெரிய யாகம் நடத்திக்கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த
மகாயக்ஞத்தின் பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று
கேட்க அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன்
என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல அதைக்
கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும், கலியுகத்தில்
மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும் பொறுமையுடன்
ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான் தரவேண்டும் என்றார்.
இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி யார்
என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று ஆராய
அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு மஹரிஷிக்குத்தான் உண்டு
என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும் அனுப்ப எண்ணினர். அவரும்
அதற்கு இசைந்தார்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்