மருதுபாண்டியர்களின் ஆயுதங்கள்

மருதுபாண்டியர்களின் போர்க்களம் பற்றிய சுவாரசியமான செய்திகள்:

மருது பாண்டியர்கள் ஈடுபட்ட போர்களில் பயன்படுத்திய ஆயுதங்கள்
வளரி,எரியீட்டி,சுண்டுவில்,வேலலகு,கத்தி,சூலம்,சக்கரம்,வாலா,வேல்,வாள்,ஈட்டி,சமுதாடு( ஒரு வகைக் கத்தி),வில்-அம்பு,கட்டாரி,கோணவேல்,வில்லுருண்டை,வல்லயம்,நேரிசம்( எறிபடை=javelin) பிண்டிபாலம்,கல்வெடி,கயத்து வெடி,துப்பாக்கி,பீரங்கி,சஞ்சாலி( ஒரு வகைப் பெரிய பிரங்கி= Fungal)சரகோபி

தனது போராளி இயக்கத்திற்கு வேண்டிய வெடிமருந்து ( வர்ணம்)ப் பொருட்களைத் தமது பட்டறையில் தயாரித்தனர்,அந்த இடம் சிவகங்கையின் தெற்கு எல்லை கீழ வாணியங்குடி கிராமத்தின் நடுவில் "வாணப்பட்டறை" எனுமிடம் உள்ளதுஅதன் அருகில் கொத்தளத்தார் மேடு எனக்கிராமத்தார் குறிப்பிடும் மேடு உள்ளது.இன்று வாணப்பட்டறையின் 22×15 காலடி எஞ்சிய செங்கற் கட்டுமான பகுதியினை மட்டும் உள்ளது.இங்கு வெடிமருந்து தொழில்சாலையும் இராணுவ நிலையும் இருந்திருக்க வேண்டும் .இதனால் தான் காளையார் கோவிலை தாக்கும் முன் கர்னல் அக்னியு சோழபுரத்திலிருந்து கும்பினிப்படையை வாணியங்குடியை நோக்கி செலுத்தி மருதுபாண்டியரின் வெடிமருந்து சாலையை அழித்திருக்கலாம்

நவீனப்போர்க்கருவிகளையும் அவர்கள் சொந்தமாக நம் நாட்டிலேயே தொழில் நுட்ப ஆற்றலைப் பெற்று விளங்கினர்.அதனால் தான் கர்னல்.வெல்ஷ் "பகைவர் நிறையவே ஆயுதங்கள் வைத்திருந்ததுடன் தங்களுக்கென்று தனியாறதொருவகைச் சிறு பீரங்கிகளை பெரும் எண்ணிக்கையில் வைத்திருந்தனர் எனக்குறிப்பிடுகின்றான்
போராளிகள் இலேசுரக ஆயுதங்களை ( LIght Weapons) மேலூர்,தாரமங்கலத்தில் தயாரித்தனர்

மருது பாண்டியரின் போராளி இயக்கத்தினர் வெடிமருந்து குண்டுகள் மற்றும் சுடும் கருவிகளை உற்பத்மி செய்வதுடன் பழுதும் பார்த்தனர் என இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்த 3 முது பெரும் பேராசிரியர்கள் தொகுத்து டில்லியிலிருந்து வெளிவந்துள்ள தென்னக வரலாறு தெரிவிக்கின்றது.
மருதிருவரிடம் பிரம்மாண்டமான பீரங்கிகள் இருந்தன.வைகைகரைப்போரின் போது தங்களுக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பைக் குறிப்பிட்ட வெல்ஷ் " எங்கள்படையை நடத்திச் சென்ற காப்டன் திராட்டருக்கு ஏற்பட்ட கடுமையான குண்டுக்காய வீக்கம் ( எதிர்தரப்பிலிருந்து)எறியப்பட்டு வெடித்ம ஒரு அசாதீரண பருமணுள்ள பீரங்கி குண்டுகளால் ஏற்பட்டது என கூறியிருப்பதிலிருந்து அதிபருமனான குண்டுகளை வெடிக்கக்கூடிய பீரங்கிகள் மருதிருவரின் படையில் இருந்திருப்பது நம்மை பிராமிக்க வைக்கின்றது

பெரும் பீரங்கிகள்( Cannons) தவிர மருதிருவர் படையினர் பயன்.படுத்திய ஆயுதங்களைப்பற்றிக் கூறிடும் வெல்ஷ் கைத்துப்பாக்கி,தீக்குச்சியால் பற்றவைக்கும் துப்பாக்கி,ஜிஞ்சால் எனும் வகைப்பிரங்கி மற்றும் சரகோபிகளையும் பயன்படுத்திய  சம்பவங்களையும் விவரித்துள்ளார்.fb
 


Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்