விநாயக சதுர்த்தி
- Get link
- X
- Other Apps
விநாயக சதுர்த்தி என்பது பிள்ளையாரின் பிறந்த நாள் விழாவாகும் .ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் இந்துக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளையார் மிகவும் எளிமையான கடவுள்.கோயிலில் மட்டும் இன்றி குளக்கரை .ஆற்றங்கரை .அரச மரத்தடியிலும் கூட வீற்றிருப்பார் .விநாயகர் தான் முழுமுதற்கடவுளாக வணங்கப்படுகிறார் .விநாயகருக்கு அபிஷேகம் ஆராதனை செய்து ஆரம்பித்தால் எந்தக்காரியமும் வெற்றியடையும் .பிள்ளையாருக்கு அருகம்புல் வைத்து வழிபடுவர் .விநாயக சதுர்த்தி மற்றும் விநாயகர் ஊர்வலம் மராட்டிய மன்னர் சிவாஜி காலத்திலேயே மிகவும் விமரிசையாகக்கொண்டாடப்பட்டது .விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்கு பிடித்தமான அரிசிமாவுக்கொழுக்கட்டை சுண்டல் மற்றும் அவல் நைவேத்தியம்செய்து வணங்குவர்.களிமண்ணால் செய்யப்பட விநாயகரைத்தான் விநாயக சதுர்த்தி அன்று வீட்டிலும் கோயில்களிலும் வைத்து வழிபடுவர் .பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைத்து வழி பட்டால் கூட அவர் ஏற்றுக்கொள்வார்.மூன்றாம் நாள் களிமண்ணால் செய்யப்பட பிள்ளையாரை ஆற்றில் .குளத்தில்அல்லது கடல்நீரில் கரைப்பது வழக்கம் .வேண்டும் வரம் தரும் பிள்ளையார் நம் வாழ்வியலில் ஐக்கியமாகி நமக்கு என்றும் அருள் பாலிக்கிறார் .
‹
›
9/6/16
3 Photos - View album
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment