துநின் பவளவாய் காண்பேனே

துநின் பவளவாய் காண்பேனே------------------------------------- திருப்பதி, திருமலை, ஏழுமலையோன் ஆதிவராக சேத்திரம் என்று
இன்றும் பல பெயர்களால் போற்றப்படும் திருவேங்கடத்து வாசம் செய்யும்
ஸ்ரீனிவாசனே, எத்தனையோ பிறவிகளாக தீர்க்கவியலாவாறு தொடர்ந்துவரும்
பாவங்களைத் தீர்ப்பவன். அதனால்தான் வல்வினைகள் தீர்க்கும் திருமால்
என்றார். பாவங்களைப் போக்க வல்ல இப்பேர்ப்பட்ட நின் கோவிலை
நாடிவரக்கூடிய அடியவர்கள், தேவாதி தேவர்கள், அரம்பையர்கள் ஆகியோர்
மதித்துவரக்கூடிய ஒரு படிக்கல்லாக நின் கோவிலின் வாசலில்
கிடக்கமாட்டேனா, அவ்வாறுதான் கிடப்பேன் அவ்விதமே கிடந்து நின்
பவளவாய் கண்டுகொண்டே இருப்பேன் என்று குலசேகராழ்வாரால்
பாசுரஞ்சூட்டப்பட்ட இத்தலம் இன்றைய கலியுகத்தில்
உலகப்பிரசித்திபெற்றதாகத் திகழ்கிறது.-------------------------------------------------------------------------------------------------------------------- -----இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்ஸவம்
காணக்கிடைப்பதரிது. பிரம்மனே இங்கு வந்து இந்த உற்சவத்தை நடத்தி
வைப்பதாக ஐதீஹம். இச்சமயத்தில் இங்கு வந்து வேங்கடவனைச்
சேவிப்பவர்களின் சகல பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள்
அறுதியிடுகின்றன. இந்த உற்சவத்தின் போது திருமலை வண்ண வண்ண
விளக்குகளால் அலங்காரம் பூண, வண்ண வண்ண உடைகளில் பக்தர்கள் பஜனை செய்து ஆடியும் பாடியும்
வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

Comments

Popular posts from this blog

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

வாணர் குல அரசர்கள்

பறவை நாச்சியார்