சங்கரன் கோயில் ஆடித்தவசுத் திருவிழா
சங்கரன் கோயில் ஆடித்தவசுத்திருவிழா.........சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.
கொடியேற்று விழா
ஆண்டுதோறும் ஆனிமாதம் சதுர்த்தி திதியும், மகம் நட்சத்திரமும் கூடிய நன்னாளில், சங்க்கரநயினார் கோவில் திருத்தலத்தின் தென்பகுதியில் கோயில் கொண்டிருப்பவரும், இந்த ஊர் தோன்றுவதற்கு முதற்காரணமுமாகிய காவற்பறையன் கோயிலுக்கு உரிய மரியாதைகளைச் செய்து பூஜைகளை முடித்துவிட்டு வந்து திருக்கோயிலில், சங்கரலிங்கப் பெருமானின் சந்நிதிமுன் அமைந்துள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நிகழும். இதுவே ஆடித்தவசுத் திருவிழாவின் முதல் நாள் துவக்கமாகும்.
ஆடித்தபசு
"தபஸ்' என்றால் "தவம்' அல்லது "காட்சி' எனப்பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாளாகும். இந்த விழா, 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.

Comments
Post a Comment