பெரியதேவர்

“பெரியதேவர்” இராசராச சோழன்
 பேரரசன் இராசராச சோழன் தேவர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர் இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்” போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு வீற்றிருந்து. . . “ என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அவ்வாறு செய்வது முக்குலத்து மக்களையே புறக்கணிக்கும் செயலாகும்..இராசராச சோழனையே அவமதிக்கும் செயலாகும்.  சிவநேசச்செல்வனை, சிவபாதசேகரனை(சிவனின் பாதங்களை தலையில் தாங்கியவன் என்ற விருதுகொண்டவனை) “வாங்கக் குடம் நிறைக்கும் பால்தரும் பசு”(எ) காமதேனுவை “நந்திகேசுவரராக” தஞ்சை பெருவுடையார்(சிவபெருமான்) முன் பிரதிஸ்டை செய்து,குடம் குடமாக பாலாபிசேகம், பன்னீர் அபிசேகம், மஞ்சள்அபிசேகம் செய்து, பூவிட்டு பொட்டுவைத்து தேங்காய் உடைத்து சூடக்கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட அந்த இராசராசசோழனை--- என்ற பெயரை தில்லைவாழ் அந்தணர்களதான், தில்லை நடராசர் கோயிலில்  வைத்து பெயர் சூட்டினார்கள்.  இராசராசசோழனின் பெரிய பாட்டியார் மழவராயர் மகள் செம்பியன் மாதேவியார் பலசிவாலயங்களை கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்துள்ளாரே.அதுமட்டுமல்ல தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் (எ) திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தன் என்று தன் கணவன் பெயரையே வைத்து மக்கள் நாள்தோறும் வழிவட்டுவந்தனரே. அம்மழவராயர் மகள்  அக்கோயிலினுள் தன்கணவர் கண்டராதித்த தேவர் சிவலிங்கத்தை வழிபடுவதாக படிமம் வைத்துள்ளதை இன்று காணலாம். (ஆதாரம்: “SII. Vol.III No.146). மேலும் நாகப்பட்டிணம் தாலுக்காவிலுள்ள செம்பியன்மாதேவி கோயிலில் தற்போதும் ஆண்டுதோறும் செம்பியன்மாதேவி படிமத்தை ஊர் முழுவதும் வீதிஉலா செய்து அதற்கு கற்பூர ஆரத்தி எடுத்து அனைவரும் பிராமணர்கள் உட்பட அனைவரும் வணங்கி வருகின்றனர்.(சதாசிவப்பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 69) தீண்டத்தகாதவருக்கு எப்படி கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்? இந்த மழவர் அரசி செம்பின் மாதேவியார் கற்றளியாக அமைத்த பிற கோயில்கள் :”விருத்தாசலம், திருகோடிகா, தென்குரங்காடுதுறை,செம்பியன் மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். முதல் இராசராச்சோழன் மகனாகிய கங்கைகொண்டசோழன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019இல் இவ்வம்மையின் படிம்ம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான். எனவே, இவ்வம்மை இறைவன திருவடியையடைந்த அண்மையிலேயே தெய்வமாக்க் கருதி கோயியலில் படிம்ம் வைந்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது(எழுதியவர் வரலாற்றுப்பேரறிஞர் அமரர் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். பிற்காலச்சோழர் வரலாறு பக்கம்.72 கல்வெட்டுக்கள் Ins 47 of 1918, Ins.36 of 1931, SII.Vol.III No.144, Ins.485 of 1925, Ins.571 of 1904, Ins.103 of 1926 துருத்தி—குற்றாலம்.I:ns.75 of 1926, Ins.9 of 1914. Ins.200 of 1904 & Ins.481 of 1925) தெய்வமாக் கருதி மன்னன் உட்பட அனைத்துபொதுமக்களாலும் அந்தணர் உட்பட அனைவராலும் வணங்கப்பட்ட செம்பியன் மாதேவியார் . நம் காலத்தில் தஞ்சைப்பெரிய கோயிலுக்கு வெளியே தமிழக முதல்வர் நிறுவிய  இராசராசசோழனின் சிலையில் இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளது. இயற்பெயர்: அருண்மொழிச் சோழன் எனறு கல்வெட்டில் தவறாக வெட்டிவைத்துள்- ளார்கள். அருண்மொழிச்சோழன் என்று எந்த வரலாற்றுப்பதிவிலும் இல்லை. இருட்டடிப்பு செய்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது இராசராசசோழனின் இயற்பெயர்: அருண்மொழித் தேவன் என்பதே சரியானது:. இதைப்பற்றி ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் திரு.தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 74 மற்றும் 92ல் எழுதியுள்ளது வருமாறு.:”இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.(SII. Vol.V Verse 61) அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித்தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. முடிசூட்டிக்கொள்ளும் முன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதை டாக்டர் மு.வ.இராச மாணிக்கனார் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம்144ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு: “சோணாட்டுக்குடிகள் அருள் மொழித்தேவனை .. பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை. தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு (உத்தமசோழனுக்கு)நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான். அவனை அரசனாக்கினான். தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். முடிசூட்டிக்கொள்ளும் முன் இளவரசன் அருண்மொழித்தேவன் என்றே குறிப்பிடப்பட்டார் என்பதை முனைவர் சி.கோ.தெய்வநாயகம் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 53ல் எழுதியுள்ளது வருமாறு: “சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்ற நான்கு பிராமணச்சகோதரர்களால் இரண்டாம் பராந்தக சோழனான சுந்தரசோழனின் மூத்த மகனும் போரில் வீரபாண்டியனின் தலையை கொய்த பெரும்வீரனான ஆதித்தகரிகாலன் சதிச்செயல்மூலம் வஞ்சகமாக கொலைசெய்யப்பட்டான்.(ஆதாரம்: காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடிகல்வெட்டு எண். Ep.Ind.Vol. XXI No.27). எனவே, ஆதித்தகரிகாலனின் தம்பி அருண்மொழித் தேவன் என்ற இளமைப்பெயருடைய இராசராசனே முடிபுனைந்து அரசப்பொறுப்பினை ஏற்கவேண்டும் என்றே மக்களும் அறிஞர்களும் சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்பி வேண்டி நின்றனர். அந்நிலையில் இரண்டாம் பராந்தகன் இராசகேசரி சுந்தரசோழனின் பெரிய தந்தை கண்டராதித்த தேவரின் மனைவியும் மழவர் குலத்தில் பிறந்தவளும் சைவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவளும் அரசியல் திருக்கோயில் பணியாளரிடையே பெரும் செல்வாக்குப்பெற்றவளுமாகிய செம்பியன் மாதேவி தம் திருவயிறு உதித்த மதுராந்தக உத்தமசோழன் சோழ அரியணை ஏறி ஆட்சிசெய்ய பெருவிருப்பம் கொண்டவனாக இருந்துள்ளான. எனவே, சிறிய தகப்பன் முறையிலான உத்தமசோழனது விருப்பத்தை மதித்து தமக்குரிய அரியணை ஏற்றத்தை விட்டுக்கொடுத்து உத்தமசோழனை(மதுராந்தகனை) கி.பி.970 முதல் கி.பி.985 வரை சோழ நாட்டை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்த பேருள்ளம் படைத்தவனாக …. இராசராசனை குறித்து திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமிதம் அடைகின்றன.” “கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்” என்று திருவிடைமருதூர் கல்வெட்டு கூறுகின்றது (Ibid.Nos.128,131 and 150) மேலும் முனைவா சி.கோ.தெய்வநாயகம் பக்கம் 47ல் எழுதியுள்ளது வருமாறு:”உத்தமசோழனுடைய கல்வெட்டு ஒன்று அருண்மொழித்தேவ கைக்கோளர் படை ஒன்றை சுட்டுகிறது. எனவே, வாலிப வயதில் அருண்மொழித்தேவன், உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் ஒரு குறும்படைப் பிரிவிற்கு தலைவனாகவும் பாட்டியார் செம்பியன் மாதேவியின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அன்போடு உதவியுமுள்ளான் என அறியமுடிகிறது. சோழநாட்டின் தலைநகரான தஞ்சாவூர் அரண்மனையில் அருண்மொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் என்ற வேளம் இருந்தது. இந்த அரண்மணைப்பகுதிக்கும் அருண்மொழித்தேவன் என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது(பக்கம் 56). இராசராசசோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், அருண்மொழித்தேவன் என்றே அனவரும் அழைத்ததால், சுமார் 42 வயதுவரை அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராகவும் இளமைகாலப் பெயராகவும் அமைந்தது. தமிழகம் ஊரும் பேரும் எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அந்நூலின் பக்கம் 120 & 161ல் குறிப்பிட்டுள்ளதாவது: “இம்மன்னனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும். தஞ்சை (தற்போது நாகை) மாவட்ட மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஒர் அருண்மொழித்தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித்தேவன் என்னும் ஊர் உண்டு.. பாண்டி மண்டலத்தைச்சேர்ந்த அருண்மொழித்தேவபுரம் என்றொரு ஊரும் உண்டு.இவ்வூர்கள் யாவும் அருண்மொழித் தேவன் நினைவாக ஏற்பட்ட ஊர்களாகும். உத்தமசோழன் கி.பி.985ல் இறந்தான். பக்கம் 53ல் முனைவர் சி.கோ. தொடர்ந்து எழுதியுள்ளது வருமாறு: “15 ஆண்டுகள் உத்தமசோழன் ஆட்சியில் போர்கள் ஏதுமின்றி, தாய்செம்பியன் மாதேவியின் சைவத் திருக்கோயில் பணிகளுக்கு உதவிய அமைதியான சூழலில் அமைந்தது. அந்நிலையில் முதல் பராந்தகனாலும், சுந்தரசோழனாலும், ஆதித்த கரிகாலனாலும் வெற்றிகொள்ளப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு இருந்த சேரர்களும் பாண்டியர்களும், வேங்கிநாட்டவரும் எழுச்சிபெற்று சோழப்பேரரசை எதிர்க்கலாயினர். அந்நிலையில் சோழநாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைதி குலைந்து கலக்கம் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில்தான், மக்களின் பெருவிருப்பத்தைத் தவிர்க்க இயலாதவனாக இளவரசன் அருண்மொழித்தேவன் இராசராசன் என்ற ஆட்சிச்பெயருடன் கி.பி. 985ஆம் ஆண்டு ஜுலை மாதம், 18ஆம் நாளுக்கு இணையான ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையில் முடிசூட்டப்பட்டு சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளான். இதனை திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் எடுத்துரைக்கின்றன. (Mysore Gazetteer Vol. II. Part II, page 943) அப்போது ஏறத்தாழ 42 வயது.(பக்கம் 102) இராசராச சோழனின் மகன் இராசேந்திரசோழனும், தன்தந்தையின் இயற்பெயரால் அருமொழி தேவனிற்க் கோயில். . எனக்குறிப்பிட்டு கி.பி.1016ஆம் ஆண்டு கல்வெட்டு வெளியிட்டார்.,இக்கல்வெட்டைக்காண்க:”. . . யாண்டு நாலாவது நடுவிருக்கும் கொட்டையூர் வூவத்தபட்ட ஸொமாஜியார் . . சொளெந்திரசிங்க ஈஸ்வரமுடையார் கோயிலின் வடபக்கத்து சாலை அருமொழிதேவனிற்க். கோயில் கருமமாராயாவிருந்து. . . .(ஆதாரம்:முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 62) . இக்கல்வெட்டில் இராசராசன் கட்டிய கோயில் என்று இராசேந்திரசோழன் குறிப்பிடவில்லை. தன் தந்தையின் இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் கட்டிய கோயில் என்றே குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, அம்மன்னர்கள் தாங்கள் பிறந்த தேவர் குலத்தில் எவ்வளவு ஈடுபாடும் மனச்சார்பும் உடையோராய் இருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா?இக்கோயில் பற்றிய வரலாற்றுச்செய்தியை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இக்கோயில், இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, அவரது 14வது ஆட்சி ஆண்டில் இராச ராசசோழனால் கட்டப்பட்டது. எனவே, “இராசராச சோழனிற்க் கோயில்” என்றுதானே இராசேந்திரசோழனின் கி.பி.1016ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுக் குறிப்பிடவேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாமல், இராச ராசசோழனின் இயற்பெயராகிய அருண்மொழி தேவனிற்கோயில் என்று கல்வெட்டில் வெட்டிவைக்கப்பட்டதிலிருந்து,முடிசூட்டிக்கொண்டபிறகும் இராசராசனின் இயற்பெயரிலேயே அக்கோயில் அனைவராலும் அழைக்கப்பட்டிருந்தது என்பது தெள்ளிதின் தெளிவாக தெரிகிறது அன்றோ?.அதுமட்டுமல்ல. இளவரசன் அருண்மொழித்தேவன் முடிசூட்டிக்கொண்டபிறகும், அவரை “பெரிய தேவர்” என்றுதான் அனைவரும் அழைத்துள்ளனர். எனவே, பெரிய தேவர் என்ற விருதுபெயர் பெற்றார் (ஆதாரம்..முனைவர் தெய்வநாகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 49) இராசராசசோழன் பெரியதேவர் என்றால், இராசேந்திரசோழனை அனைவரும் சிறியதேவர் என்று அழைத்திருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாகும்.. இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்ட பிறகு “திரு.இராஜ ராஜ தேவன்” என்ற பெயர் தாங்கிய வெள்ளிக்காசை வெளியிட்டார்(ஆதாரம்..ஹுல்ஸ் EA.XXV பக்கம்317 கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகளின் சோழர்கள் புத்.1 பக்கம்.23) அருண்மொழித் தேவ வளநாடு, அருண்மொழித்தேவ பெருந்தெரு,அருண்மொழித்தேவ மரக்கால், அருண்மொழிதேவ சாலை, அருண்மொழித்தேவ வாய்க்கால் என்று இராசராச சோழனின் ஆட்சியின்போது வழங்கிவந்த பெயர்கள் யாவும், அவருடைய இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்பதை உறுதிபடுத்துகின்றன.(ஆதாரம்: TAS VPP 29-30. 186 OF 1925, 227 OF 1921, 401 OF 1921, SII III 1908)-----மழவராயர் பக்கங்களிலிருந்து

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

நாரையூர்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்