அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில்
அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில்,நாட்டரசன் கோட்டை-----கோயில் துவக்கத்தில் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகள் மன்னர் பரம்பரையினரால் கட்டப்பட்டிருந்தன.
அதையடுத்து அம்மனுக்கு அலங்கார மண்டபம், அபூர்வ சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய வெகு உயரமான ராஜகோபுரத்தை அடுத்து சொக்காட்டாஞ்சாரி என்ற கர்ணக்கால் மண்டபம் அபூர்வ வேலைபாடுகளுடன் பொறியியல் நுணுக்கத்துடன் நகரத்தார்களால் எழுப்பப்பட்டது. கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. அம்மனுக்கு மர வாகனங்களும், வெள்ளிக்கேடயம், வெள்ளிக்குதிரை, வெள்ளி ரதம் ஆகியவை இருக்கின்றன.--------------------------------------------------சோழநாட்டில் பிறந்த கம்பன், மன்னவனும் நீயோ? வளநாடும் உனதோ? என சோழ மன்னனைப் பழித்துப் பாடிவிட்டு, செட்டி நாட்டுப் பகுதிக்கு தனது இறுதிக் காலத்தைக் கழித்த கம்பன் நாட்டரசன் கோட்டையில் மாண்டான் என்று நம்பப்படுகிறது. அவனது சமாதிக் கோயில் இவ்வூரில் அமைந்திருக்கிறது. கம்பன் தான் இயற்றிய இராமகாதையை அரங்கேற்றிய பங்குனி மாதம் அத்த நாளில் இச்சமாதிக் கோயில் வளாகத்தில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழாவின் நிறைவு விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
Comments
Post a Comment