சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.

சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை.பகவத் கீதையில் கிருஷ்ணர் ,"மாதங்களில் நான் மார்கழி என்றும்,நட்சத்திரங்களில் நான் திருவாதிரை "என்றும் கூறியுள்ளார்.அதில் இருந்து திருவாதிரையின் பெருமை விளங்கும்.அதே போன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று சிவன் கோயில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பல்வேறு பலன்களையும் ,வளங்களையும் அள்ளித்தரும் வழிபாடாக உள்ளது.நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அவரது ஐந்தொழில்களான  ஆக்கல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமையும் பொருட்டே கோவில்களில் பஞ்ச கிருத்திய உற்சவம் நடைபெறுகிறது.திருவாதிரை நாளில் சிவபெருமான் ஆடிய ருத்ர தாண்டவத்தைப்பார்த்து மகாவிஷ்ணு மெய்சிலிர்த்தார்.மார்கழி மாத திருவாதிரை அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

பறவை நாச்சியார்

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்

நாரையூர்